டெக்மோரா

மிழ் சினிமாவுல லாஜிக்கே இல்லாம ஹீரோயினைப் பார்த்த உடனே வானத்துல பறக்குற ஹீரோக்களைப் பார்த்திருப்போம். ஆனா, இனிமே அந்தக் காட்சியெல்லாம் ரியல் ஃலைப்ல சாத்தியம்தான்! `பறந்து வருவான் பாரேன்'னு சொல்ற மாதிரி, ஒரு மெஷினை ஆஸ்திரேலியாவின் முன்னாள் கமர்ஷியல் ஃபைலட் டேவிட் மேமன் என்பவர் கண்டுபிடிச்சிருக்கார். கையோட, `2019-க்குள்ள கடையை விரிச்சிடுவோம்!'னும் சொல்லியிருக்கார். அதுதான், டர்போ இன்ஜின் கொண்ட பறக்கும் `ஜெட் பேக்'!

இந்த ஜெட்-பேக்கின் சோதனை ஓட்டங்களைப் பல நாடுகளில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார் இவர். சில வாரங்களுக்கு முன்பு, லண்டன் மக்களை இந்த `ஜெட் பேக்'குகளில் ஏற்றிவிட்டுப் பரவசப்படுத்திய மேமன், தேம்ஸ் நதிக்கு மேலே 40 அடி உயரத்திற்குப் பறந்து, 4 நிமிடங்கள் வரை வானத்தை வட்டமடித்துத் திரும்பியிருக்கிறார். `ஜெட் பேக்'கின் இன்ஜினை முதுகில் மாட்டிக்கொண்டு, வானத்தில் இவர் பறந்த வீடியோ இணையத்திலும், செம வைரல்!

`சூப்பர்மேன்' மாதிரி மனிதர்களும் பறக்கணும், பறக்கமுடியும் என்பதைக் காட்டுவதற்காகவே இந்த ஜெட்-பேக்கினை உருவாக்கினாராம் டேவிட் மேமன். இதுவரை நடந்த பரிசோதனைகள் அதை நிரூபித்திருக்கிறது. இந்த ஜெட்-பேக் தயாரிப்பை 3 லட்சம் பவுண்ட் `கிரவுட் ஃபண்டிங்' இன்வெஸ்ட்மென்ட்டில் துவங்க உள்ளதாகவும், 2019-ல் விற்பனைக்குக் கொண்டுவரவும் திட்டமிட்டிருக்கிறார் மேமன்.

அப்புறமென்ன பாஸ்? இனிமே 4வது மாடி பால்கனியில் குழந்தை மாட்டிக்கொண்டால் காப்பாற்றலாம். மாடி ஜன்னல் வழியாக கைகாட்டும் காதலியை சக்திமான் போல பறந்து கிஸ் அடிக்கலாம். அவ்ளோ ஏன்... சென்னை டிராஃபிக்ல சிக்காம, விருட்டுனு பறந்துவந்து, ஆபீஸ்ல ஆஜர் ஆகலாம்! என்ன, விலைதான் கொஞ்சம் கிறுகிறுனு இருக்கும். ஏன்னா, இதோட விலை... 1.5 கோடி!

ஒரு கோடிப்பே..!

- டெக்கிகய்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick