வெல்கம் டு சென்னை!

சிங்காரச் சென்னையோட எல்லை செங்கல்பட்டு தாண்டி விழுப்புரம் வரைக்கும் வளர்ந்துகிட்டே போனாலும், பிடிச்சோ பிடிக்காமலோ ஆயிரக்கணக்கான பேர் இங்கே புதுசா வந்துகிட்டேதான் இருக்காங்க. ஆனா, சென்னைக் குடிமகனாக இருக்கவும் சில தகுதிகள் இருக்கு பாஸ்!

நீங்க எப்பேர்ப்பட்ட ஆளா இருந்தாலும் சரி. ரோட்டை கிராஸ் பண்றப்போ சிக்னல் விழுந்து உங்களை நடு ரோட்ல நிற்கவைக்கும். அதான் பாஸ் சென்னை! வில்லன் குரூப் ஆளுங்க ஏ.கே-47 வெச்சு சுட்டாலும், ஹீரோ உடம்பைத் திருப்பித் தப்பிக்கிற மாதிரி ட்ராஃபிக்ல வண்டிகளுக்கு நடுவுல நுழைஞ்சு போகக் கத்துக்கணும்.

ரெண்டு படியிலயும் தொங்கிட்டு வர்ற சென்னை மாநகரப் பேருந்துல ஏறுறதுக்கும், உள்ளே இடிபாட்டுக்குள்ள நுழைஞ்சு போறதுக்கும் ஸ்பெஷலா ட்ரெயினிங்லாம் எடுக்கத் தேவையில்லை. காலை மிதியுங்கள் வழி கிடைக்கும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick