பியூட்டி அட்ராசிட்டி! | Beauty Atrocity - Timepass | டைம்பாஸ்

பியூட்டி அட்ராசிட்டி!

விளம்பரத்துல வர அசின்ல இருந்து நம்ம வீட்லயே உலாவுற கசின் வரைக்கும் ‘என்னா கலரு, என்னா ஃபிகரு’ன்னு பொண்ணுங்க பொறாமைப்படாத ஜீவராசிகளே கிடையாது. கேர்ள்ஸ் மேக்கப் கேபினுக்குள்ள அப்படி என்னதான் நடக்குது?

* ‘ஏழே நாள்ல பளிச்சென்று சிகப்பழகு’ன்னு நமக்குப் பரிந்துரை பண்ற ஃப்ரெண்ட் இருப்பாளே, அவ ஆல்ரெடி உரிச்ச ஆனியன் கணக்கா வெள்ளையாத்தான் இருப்பா. இந்த உண்மை தெரியாத நாம ஆசைப்பட்டு ஆப்பு வெச்சிக்கிட்டா சேதாரம் நமக்குத்தான் கேர்ள்ஸ். ஏழு நாள் இல்ல... ஏழேழு ஜென்மத்துக்குப் பூசினாலும் கிளியோபாட்ரா கலருலதான் திரிவோம்னு தியரியே இருக்கு டியர்ஸ். எங்க அவ, ‘ரெட் கலரு? அதுவும் ஏழே நாள்ல?! நீ பார்த்த?

* என்னடா இது, முதல் முயற்சியே இப்படி ஆகிப்போச்சேன்னு மனம் திருந்துவோமோ? ச்சே ச்சே... அப்படித் திருந்திட்டா கம்பெனி நஷ்டத்துல ஓடிடாது? இந்த வெள்ளையம்மா போனா... இன்னொரு துரையம்மா கிடைக்காமலா போய்ருவா? `வா சுருதி போவோம்'னு அடுத்த கிரீமுக்கு உடனே தாவிட மாட்டோமா என்ன?

* முகத்துக்கே இந்த மூச்சு வாங்குதே, மத்ததுக்கெல்லாம்..? ம்ஹூம், மனம் தளராதே மண்டோதிரின்னு மனசைத் தேத்திக்கிட்டு கழுத்து, காது, கை, கால்னு ஒவ்வொரு ஏரியாவையும் அழகூட்டப் பார்த்துப் பார்த்து பர்ச்சேஸ் பண்ணி எல்லாத்தையும் அலேக்கா அப்ளை பண்ணிட்டு மாபெரும் தெருதனில் நாம் நடந்தால் அந்த நாய்தான் துரத்துமே! ச்சூ ச்சூ... தூரப்போ!

* இந்தப் பொண்ணுங்கள்லேயே இன்னொரு வகை உண்டு. `என்னாது பியூட்டி ப்ராடக்ட்ஸா? அப்படினா அது அமெரிக்கா பக்கத்தில் இருக்கிற ஓர் ஊர்தானே'ன்னு கேட்கிற அடேங்கப்பா கேட்டகிரி. கால் கிலோ கடலைமாவு, அரை கிலோ மஞ்சள்தூள், ஒரு கப் தயிர் இதைக்கொண்டே முகத்தை பளிச் ஆக்குவாங்க. வெந்நீரில் உப்பு போட்டு கை கால்களுக்கு மேனிக்யூர், தேங்காய் எண்ணெய் பூசி பெடிக்யூர்னு வீட்டில் சமைக்க வெச்சுருக்கிறதை எல்லாம் சமர்த்தா எடுத்துப்போட்டு நானும் சமந்தாதான்னு வருவாங்க! உவ்வ்வாவ்!

* பாசிப்பயிறு மாவு யூஸ் பண்றதில் இருந்து பியூட்டி பார்லர் போறவரைக்கும் என்னென்னவோ பண்ணிப்பார்த்தாலும் கடைசியில் வர்ற ரிசல்ட் என்னவோ, ‘அந்தக் கொரங்கு பொம்மை என்ன விலை சார்’ மாதிரிதான்!

* ஒரு கட்டத்தில் மனசு வெதும்பிப்போய் ‘இதெல்லாம் நமக்கு செட் ஆகாது. என் முகத்தை என் ஆள் பார்த்தா, வெறுத்துடுவான். நம்ம பழக்கவழக்கத்தை இன்னையோட பினாயில் ஊத்திக்கழுவி, விலகிக்கலாம்’னு ‘என்னத்த கண்ணம்மா’ ஆகிடுவோம். எல்லாத்தையும் உதறித்தள்ளிட்டு சோப் மட்டும் யூஸ் பண்ற மனசு இருக்கே... அதான் சார் கடவுள்!

- ச.ஆனந்தப்பிரியா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick