இரட்டைக் கொடி பறக்குதா?

`அட என்னங்கப்பா இது, எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியுதே' எனக் கண்ணைக் கசக்கிக் கேட்டால், `ஆமா  பாஸ் இங்க எல்லாருக்குமே டபுள் ரோல் தான்' என ஆச்சர்யப்படவைக்கின்றனர் ரியல் இரட்டையர்கள். `குடியிருந்த கோயில்' காலத்து எம்.ஜி.ஆர் ஆகட்டும் `அதிசயப்பிறவி' ரஜினி ஆகட்டும், `கொடி' தனுஷ் வரை தமிழ் சினிமாவில் டபுள் ஆக்‌ஷன் படங்களில் தில்லுமுல்லுகளுக்குப் பஞ்சமே இருக்காது.

`இதுவரைக்கு எந்த டபுள் ஆக்‌ஷன் படத்துலயும் இரட்டையர்களோட உணர்வுகளைச் சரியா பதிவுபண்ணுனது இல்லைன்னு தோணும் . எங்கள்ல ஒரு ஆளுக்கு சந்தோஷமான சம்பவம் எதுவும் நடந்தா அது அப்படியே இரட்டிப்பா  இருக்கும்.சோகமான சம்பவங்கள் நடந்தா அது அப்படியே பாதியாக மாறிடும், ஏன்னா உயிர் நண்பன் வெளில இருந்து எங்களுக்குக் கிடைக்கல. எங்க வீட்டுக்குள்ளயே கெடைச்சுருக்காங்க' என்று சொல்லும் இந்த இரட்டையர்கள்  கடந்துவந்த `ரியல் லைஃப்' தில்லுமுல்லு அனுபவங்கள்...

அரவிந்த்-அருண்

``நாங்க தஞ்சாவூர் பசங்க. இப்போ சென்னையில ரியாலிட்டி ஷோ கோஆர்டினேட்டர்ஸா இருக்கோம். எனக்கு ஒரு நிழல் இருக்கு, அந்த நிழலுக்கு ஒரு உயிர் இருக்கு அப்டின்னா அது என்கூடவே பொறந்த அருண்தான். பள்ளிக்கூடம் போற வழியில சைக்கிள்ல போனாலும் சைக்கிளை ஓட்டிக்கிட்டுப் போக மாட்டோம். உருட்டிக்கிட்டே பெல் அடிச்சுக்கிட்டே `எங்கள பாருங்கடா'ன்னு சொல்லிக்கிட்டு தான் போவோம். `ச்ச்சோ'ன்னு பெய்யுற  மழையிலே நனைஞ்சுக்கிட்டு 3 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் கடைக்குப் போயி மழைக்கு ஒதுங்குவோம். கூட்டத்துல இருக்குற எல்லாரும் நம்மள பார்க்குறப்ப வித்யாசமான ஃபீல் உண்டாகும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick