சினிமால் | Cinemaal - Timepass | டைம்பாஸ்

சினிமால்

டிகர் சங்கத் தேர்தலில் நெருக்கமான விஷாலும், கார்த்தியும்தான் தற்போது பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். எந்த வித ஈகோவும் இல்லாமல் இரண்டு பேரும் இணைந்து நடிக்க முடிவெடுத்துள்ளார்கள். `கருப்பு ராஜா வெள்ளை ராஜா' என்ற பெயரில் உருவாகும் அந்த டபுள் ஹீரோ கதையை தயாரித்து இயக்குவது நம்ம பிரபுதேவா மாஸ்டராம். தமன்னாவை ஒரு வழியாக நாயகியாக `ஓகே' செய்திருக்கிறார்கள் இந்த மூவரும். வெள்ளை ராணி!

விஜய் சேதுபதி `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் நடித்தபோதே அதன் ஒளிப்பதிவாளரும், நண்பருமான பிரேம்குமாருக்கு ஒரு படம் நடித்து தருகிறேன் என வாக்குறுதி கொடுத்தாராம். தற்போது பிரேம் கதையோடு விஜய் சேதுபதியிடம் போக உடனே `ஓகே' சொன்னதோடு மொத்தமாக கால்ஷீட்டையும் கொடுத்து விட்டாராம். நாயகியாக நடிக்க த்ரிஷாவிடம் கேட்க, `விஜய் சேதுபதியோடு நடிப்பது என் நீண்ட நாள் ஆசை' என சொல்லி அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். அவளும் நோக்க, அண்ணலும் நோக்க!

கேத்ரின் தெரஸா தெரிந்தோ தெரியாமலோ சரைனோடு படத்தில் அரசியல்வாதியாக நடித்துவிட்டார். அதே போன்ற ரோல் ஒன்றில் நடிக்க வைக்க விடாமல் கேட்டார்களாம். கதையைக்கேட்ட கேத்ரின் அவரது ரோல் ரொம்ப பிடித்து போய் நடிக்கிறேன் என சொல்லிவிட்டார். தேஜா இயக்க, ராணா டக்குபதி, காஜல் அகர்வால், நவ்தீப் ஆகியோர் நடிக்கும் படத்தில் கேத்ரின் தெரஸாவுக்குதான் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாம். மதர் தெரஸா மாதிரி சேவை பண்ணுவீங்களா?

பாலிவுட் பிரபலங்கள் என்றாலே திருமண விழாக்களில் ஆடுவது எல்லாம் சகஜம். ஷாரூக் கான் முதல் நேற்று வந்த சாதா கான் வரை எல்லா நடிகர்களுக்குமே மவுசு உண்டு. அடுத்த மாதம் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி திருமணம் நடக்கிறது. மகள் ஷாரூக் கானின் தீவிர ரசிகை என்பதால், தன் திருமணத்தில் ஷாரூக் ஆட வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார். பல கோடி ரூபாயை கொடுத்து ஷாரூக்கை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து விட்டாராம் அம்பானி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick