எல்லாம் சினிமாமயம்!

சென்னை ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் இருக்கிற அந்த ஆயத்த ஆடைக்கடையின் பெயர் ‘fully filmy’!  ஆம்... கடைக்குப் போனால் கதவைத் திறக்குறதுல இருந்து கல்லாப்பெட்டி வரைக்கும் சினிமா சினிமா என எங்கும் எதிலும் சினிமா தான் என்றிருக்கிறது. `என்னது டிரெஸ் கடையில... படமா’ என்று கேட்டால்... `ஆமா பாஸ், fully filmyனு பேரு வச்சுட்டு படம் இல்லாமலா’ என வரவேற்கின்றனர் ஆனந்தும் ரானக்கும். கடையின் ஓனர்கள்!

``இந்த ஐடியா ஹாலிவுட் பாலிவுட்டெல்லாம் இருக்கு. தென்னிந்தியாவுல இது ரொம்ப கம்மி. நானும் ரானக்கும் ஒன்பதாவது படிக்கிறப்ப இருந்தே ஃப்ரெண்ட்ஸ். ஒரே காலேஜ், காலேஜ் முடிச்சதும் ஐ.டி கம்பெனில வேலைன்னு ஒண்ணாவே ட்ராவல் பண்ணிட்டு இருந்தோம். சின்ன வயசுல இருந்தே சினிமா ஆர்வம் அதிகம். எது யோசிச்சாலும் சினிமா இல்லாம யோசிக்க முடில. சினிமா ஐடியா பிடிச்சு மினிமல் கோலிவுட் டிசைன்ஸ் செஞ்சு ஃபேஸ்புக்ல சாதாரணமா ஆரம்பிச்சோம். அதுக்கு நல்ல வரவேற்பு இருந்துச்சு. எங்க கூட கார்த்தியும் ஸ்ரீதரும் சேர்ந்தாங்க. ரெண்டு மூணு பேருல ஆரம்பிச்சு இப்போ இருபத்தி அஞ்சு பேருல நிக்கிறோம்.’’ என்று கடையின் முன் கதை கூறினார் ஆனந்த்!

`` `1+1=1 புரொஃபசர் செந்தில் சாருக்கு நன்றி!'  எனக் கரகாட்டக்காரன் படத்துல இருந்து முதல் ஐடியா பிடிச்சோம். இப்படி சின்னச் சின்ன விஷயங்களா செஞ்சிட்டு இருக்கிறப்போ மெட்ராஸ் டாக்கீஸ்ல இருந்து `ஓகே கண்மணி’ படத்துக்கான ப்ரோமோஷன் வாய்ப்பு வந்தது. நாம செய்யுற வேலைக்காக கிடைக்கிற அங்கீகாரம் இன்னும் அதிக உத்வேகத்தோட வேலை செய்ய வைக்குது!’’ என்கிறார் ரானக்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick