ஆஃப் த ரெக்கார்டு! | Cinema gossips - Timepass | டைம்பாஸ்

ஆஃப் த ரெக்கார்டு!

யக்குநர் கணவரைப் பிரிந்த பிறகு தன் தோழிகளுடன் சேர்ந்து கொண்டு இஷ்டத்துக்கும் பார்ட்டி, பப் என ஊர் சுற்றுகிறாராம் பால் நடிகை. அவ்வப்போது கணவரை சாடும் விதமாக கருத்தும் பதிவு செய்து வருகிறார்.

‘உதயமான’ நடிகர் அடுத்து ‘கௌரவமான’ இயக்குநர்  படத்தில் நடிக்க இருக்கிறார். அந்தப் படத்தின் கதை உதவி இயக்குநர்  ஒருவரிடமிருந்து திருடப்பட்ட கதையாம். தற்போது பிரச்னை வெளியே கசிவதால் திகைப்பில் இருக்கிறாராம் இயக்குநர்.

‘விரல்’ நடிகரோடு  பார்ட்டிகளில் சந்தித்துப் பழகி அவரைக் காதலிக்கத் தொடங்கி விட்டாராம் ‘உலக நடிகரின்’ வாரிசு. ஆனால், நடிகரோ அதனை ஏற்க மறுத்து விலகிவிட, நடிகை மிகவும் சோகத்தில் மூழ்கி இருக்கிறாராம்.

‘கனடா நீலப்பட’ நடிகையை  தன் படத்தில் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடவைக்க சம்பளத்தையும் கூட பார்த்துப் பேசி முடித்தாராம் ‘பன்ச்’ நடிகர். இடையில் என்ன நடந்ததோ `அந்த நடிகை வேணாம்', எனச் சொல்லி  விட்டாராம்.

முன்பு டிராப் செய்த ஒரு படத்துக்கு பதில் வேறு ஒரு படம் நடித்துக் கொடுக்க உறுதி அளித்த ‘மதுபான நடிகர்’ இன்னும் நடித்துக் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறாராம். ‘கலையான புலி’ தலையிட்டுப் பேச, `சரி நடிச்சுத் தரேன்'னு சொன்னவர் தற்போது வேண்டுமென்றே இழுத்தடிக்கிறாராம்.

‘கொழுக் மொழுக்’ நடிகை வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் உட்கார்ந்திருப்பதால் தன் அம்மாவை மீண்டும் சென்னைக்கு அழைத்திருக்கிறார். கூடவே, டபுள் ஹீரோயின் படங்களை இயக்கும் இயக்குநர்களுக்கு போன் செய்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick