முடியலடாவ்வ்வ்!

மாற்றம் என்பதே மாறினாலும் மாறவே மாறாதது இந்த `தலயா...தளபதி?'யாங்கிற சண்டைதான். லாஜிக்கா சண்டை போட்டாக்கூட வேடிக்கை பார்க்கலாம். ஆனால், சில நேரம் அவங்கபோடுற கப்பித்தனமான பால்வாடி சண்டைல்லாம் இருக்கே..! மிடியலை. நீங்களே பாருங்க...

தமிழ் எழுத்தின் முதல் எழுத்து அ, எங்க தலயோட முதல் எழுத்தும் அ. அதனால எங்க `தல' தான் எப்போதுமே கெத்து!

கோட்டு போட்டு நடிக்கிறதுல தமிழ்நாட்டு ஜேம்ஸ்பாண்ட் தல தான்டா! (அது ஜெய்சங்கர்!)

`thalapathi'னு இங்க்லீஷ்ல எழுதுறதா இருந்தாலும் எங்க `thala' பேருதான்டா ஃபர்ஸ்ட் இருக்குது தல இல்லாம தளபதியே கிடையாதுடா!

சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைல்லாம் எங்க தலயோட தலைக்கு மட்டும்தான்டா செட் ஆகும். தல தலைசீவி வந்தா தமிழ்நாடே தெறிக்கும்டா!

வேதாளத்துல தெறிக்கவிடலாமானு எங்க தல சொன்னதை காப்பியடிச்சுதான்டா `தெறி'னே நீங்க டைட்டில் வெச்சீங்க. அது தெரியுமா உங்களுக்கு?

மங்காத்தாடாவ்வ்வ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick