ஐடியா ஐயா!

ப்போதெல்லாம் சாதாரண ஜவுளிக்கடையிலிருந்து பெரிய பெரிய தயாரிப்புகள் வரை... அனைத்திற்கும் விதவிதமா விளம்பரம் பண்றதுக்குதான் ஐடியா தேடிட்டு இருக்காங்க. அவங்களுக்காக அல்டிமேட் அட்டகாசமான ஐடியாக்களைக் கொஞ்சம் பார்ப்போமா?

கல்யாணப் பந்தி அப்பளத்துல விளம்பரம் பண்ணிட்டாங்க... ஆனால் வாழை இலையில் இன்னும் பண்ணலை. அதை ஏன் விட்டுவைக்கணும்? அதுல பிரிண்ட் பண்ணினால் அத்தனை பேரும் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள நம்ம விளம்பரமும் மனப்பாடம் ஆகிடுமே!

விளம்பரத்துக்காக யார் யாரையோ புடிச்சி சம்பளம் கொடுக்கிறதுக்குப் பதிலா, வீட்டுக்கு வீடு கிசுகிசு பேசுற பாட்டிமார்கள் இருக்காங்களே... அவங்களைப் புடிங்க! அவங்க சொல்றதைத்தான் இப்போவரைக்கும் இந்த உலகமே நம்பிட்டு இருக்கு. அவங்களைக் கூப்பிட்டு நம்ப வெச்சாலே போதும். அப்புறம் தன்னால பரவிடும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்