ஆண்-பெண் வித்தியாசம்! | Boys Vs Girls - Timepass | டைம்பாஸ்

ஆண்-பெண் வித்தியாசம்!

ண்களும் பெண்களும் ஒருத்தருக்கொருத்தர் சளைச்சவங்க இல்லைனாலும் இருவருக்கும் இடையே ஆறு வித்தியாசங்கள் இல்லை, ஆயிரம் வித்தியாசங்கள் கண்டுபிடிக்கலாம். இங்கே சில சாம்பிள்ஸ்...

பசங்ககிட்டே ரெண்டே ரெண்டு சட்டையும், ஒரு ஜீன்ஸ் பேன்ட்டும் இருந்தாலே அசராம ஒரு வாரத்துக்கு மாத்தி மாத்திப் போட்டு ஒப்பேத்திருவாய்ங்க. ஆனால், பொண்ணுங்க தங்களோட ட்ரெஸ்ஸிங் ட்ராயர் முழுக்க கலர்கலரா துணிகளை அடுக்கி வெச்சிருந்தாலும் வாரத்தில் கடைசி நாள் வருவதற்குள் `இதிலே எதைப் போடுறது'ன்னு தனியா உட்கார்ந்து தலையைத் தொங்கப்போட்டு ஃபீல் பண்ணுவாங்க.

பொண்ணுங்களோட ஒர்க்கிங் டேபிள் ஒரு பூ ஜாடியும், பென் ஹோல்டரையும் அழகா அடுக்கி வெச்சு அமாவாசைக்குக் கழுவின கிச்சன் மாதிரி பளிச்சுனு இருக்கும். ஆனால், பசங்களோட ஆபிஸ் டேபிளில் பைக் துடைக்கும் துணியைத் தவிர எல்லாமே சிதறிக் கிடக்கும். ஆயுதபூஜை அன்னிக்குக்கூட பசங்க டஃப் ஃபைட் கொடுக்க முடியாது.

பொண்ணுங்க பயன்படுத்துற டெஸ்க் டாப் ஸ்க்ரீன்ல மருந்துக்குக் கூட ஒரு இடம் விடாம ஃபோல்டர்களாகவே நிறைஞ்சு கிடக்கும். பசங்களோட டெஸ்க்டாப் வால்பேப்பர்ல டீ-ஃபால்ட்டா இருக்கிற நாலைஞ்சு ஐகான் மட்டும்தான் இருக்கும். அதையும் அழிக்க முடியாம ஆத்திரத்தோடு மிச்சம் வெச்சிருப்பாய்ங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick