இதெல்லாம் பாவம் மை சன்!

மிழ் சினிமா இயக்குநர்களின் தேடல் வெறி சமயங்களில் எல்லை தாண்டிய பயங்கரவாதமாக மாறிவிடுவதும் உண்டு.  நாம் மரியாதையோடு பார்த்து வியந்த பல ஆளுமைகளை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அந்தளவு கேவலப்படுத்தியும் உள்ளார்கள். அதற்குக் காரணம் அந்தப் பிரபலங்களின் சினிமா ஆசையா, அல்லது இயக்குநர்களின் திட்டமிட்ட பழிவாங்கலா என்பது தெரியவில்லை... அப்படி யாரைக் கேவலப்படுத்திட்டாங்கன்னு கேட்குறீங்களா..? இந்தா பார்த்துக்கோங்க!

ஹைப்பி்ச்சில் பாட்டுப்பாடும் பிரபல பின்னணிப் பாடகரான மாணிக்கம் விநாயகம், மக்களுக்குப் பல நல்ல பாடல்களைத் தந்திருக்கிறார். பக்திப்பழம்போல பொது நிகழ்ச்சிகளில் காட்சி தருவார். சும்மா விட்டாரா நம்ம மிஷ்கின்?  `யுத்தம்செய்' படத்தில் வக்கிரமான  செக்ஸ்வெறியராக இவரைக் காட்டி இருந்தார். கடைசி சீனில் பட்டாப்பட்டி டவுசரோடு கண்களைக் குருடாக்கி அலைய விட்டதெல்லாம் ஓவரோ ஓவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick