தேடலோ தேடல்!

வாழ்க்கை தேடல்கள் நிறைந்ததுதான்னு யாரு சொன்னாங்களோ தெரியலை. ஆனா, நல்லாவே அது  மேட்ச் ஆகுது. காலையில இருந்து ராத்திரி வரைக்கும் நம்ம தேடுற தேடலைத்தான் கொஞ்சம் பாருங்களேன்...

காலையில் எழுந்திரிச்ச உடனே ராத்திரி கட்டியிருந்த லுங்கி இடுப்புல இருக்கா இல்லையான்னுகூட பார்க்கிறதில்லை. மொபைல் எங்கேன்னுதான் தேடுவோம். அதிலும் பயன்படுத்துற மொபைல் அப்ளிகேஷன்ல இருந்து என்ன நோட்டிஃபிகேசன் வந்துருக்கு, இன்னைக்கு மென்னு துப்ப வாட்ஸ்-அப்ல என்ன கிடைச்சிருக்குனுதான் முதல்ல தேடுவோம்.

எந்த ட்ரெஸ்ஸைப் போட்டுக்கிட்டு ஆபீஸுக்குப் போறதுங்கிறதுதான் அடுத்த தேடலா இருக்கும். அதிலும் இது துவைச்ச ஜீன்ஸா, துவைக்காத ஜீன்ஸானு ஆராய்ச்சி பண்ணிக்  கண்டுபிடிக்கிறதுக்கே அரைமணி நேரம் ஆகும். (இது பேச்சுலர் ரூம் பசங்களுக்கு இருக்கிற அரியவகை சோதனை பாஸ்!) அதுக்கப்புறம் பச்சைச் சட்டை போடுறதா, ஊதாச் சட்டை போடுறதானு குழம்பி ஒருவழியாக சிவப்புச் சட்டையைப் போட்டுக்கிட்டு ஆபீஸ் கிளம்பிடுவோம்ங்கிறது தனிக்கதை!

அடிக்கடி டார்ச்சர் பண்ணுறது ஐ.டி கார்டுதான். ராத்திரி வீட்டுக்கு வந்த அவசரத்துல எங்கே போட்டுத் தொலைஞ்சோம்னு தேடு தேடுனு தேடிக்கிட்டு இருப்போம். கடைசியாத்தான் தெரியும், பத்து நிமிடத்துக்கு முன்னாடி இதே மாதிரி தேடித்தான், பேன்ட் பாக்கெட்டுல விட்டுக்கிட்டோம்னு!

இந்த அக்கப்போரெல்லாம் முடிஞ்சு பஸ் ஸ்டாப்ல போய் நாம போற ஏரியாவுக்கு பஸ்ஸைத் தேடுவோம். நம்ம பஸ்ஸைத் தவிர்த்து மற்ற எல்லா பஸ்ஸும் காலியான சீட்டோட வரிசைகட்டி வரும். இதெல்லாம் கொடுமையன்றோனு பொறிகலங்கி, நமக்கான பஸ்ஸை நோட்டம் விடுவோம். இந்த, பஸ் நம்பர் தேடிக் கண்டுபிடிச்சுப் போறது இருக்கே... கொடுமை பாஸ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick