FOREIGN சரக்கு

மெரிக்க தேர்தல் ஜுரம் பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. மடோனா தொடங்கி சகலரும் கருத்து முத்துகளை உதிர்க்கிறார்கள். அதில் லேட்டஸ்ட் எம்மா வாட்சன். ‘இந்தத் தேர்தல் மிக முக்கியமானது. அதை மேலும் முக்கியமானதாக மாற்றும் சக்தி பெண்களிடம்தான் இருக்கிறது. நாம் நினைத்தால் மொத்த தேசத்தையும் காப்பாற்றலாம். எனவே, மறக்காமல் வாக்களியுங்கள்’ என ஃபேஸ்புக்கில் அவர் போட்ட ஸ்டேட்டஸ்களுக்கு லைக்குகள் பிச்சு உதறுகின்றன. இவங்க மனசுல யாரை நினைச்சு சொல்றாங்க, என்ற கேள்வியோடு சுற்றுகிறார்கள் ரசிகர்கள்.#நாடு மாறுனாலும் சீன் மாற மாட்டேங்குதே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்