கலீசிடா... அழகிடா!

கியூட் அழகியான நடிகை எமிலியா க்ளார்க்கைத் தெரியுமா?

பிரிட்டனைச் சேர்ந்தவர். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண்போல சமர்த்தாகத் தெரியும் இவர், ‘எஸ்கொயர்’ என்ற அமெரிக்கப் பத்திரிகையின் 2015-ம் ஆண்டிற்கான செக்ஸியான பெண்ணாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.அதற்குத் தகுந்தாற்போல் போட்டோஷூட் நிகழ்த்தி சூடு பறக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் அண்மையில் வெளியிட்டு இளைஞர்களின் தூக்கத்தைக் கன்னாபின்னாவென்று கெடுத்திருக்கிறார்.

HBO நிறுவனத்தின் தயாரிப்பில் மெகா ஹிட் அடித்துக்கொண்டிருக்கும் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் எமிலியா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தத் தொடர் இவரைப் புகழின் உச்சத்திற்கே கொண்டுசென்றுள்ளது. முதலில் இந்தக் கதாபாத்திரத்திற்கு வேறொரு நடிகை ஒப்பந்தமாகி, அதன்பின் அவர் நீக்கப்பட்டார்.  எமிலியா ஒப்பந்தமானதும் இந்தத் தொடருக்கு இன்றைய ஆண் விசிறிகளின் எண்ணிக்கை எகிறிடுச்சு! தனது இயற்பெயரைவிட இந்தத் தொடரில் இவர் நடித்த கதாபாத்திரத்தின் ஒரு பெயரான ‘கலீசி’ என்றே இவர் ரசிகர்களால் அறியப்படுகிறார்.

‘எஸ்கொயர்’ பத்திரிகையின் இந்த விருதுக்கு ஒரு ராசி இருக்கிறது. இதற்குத் தேர்வான அனைவரும் தொடர்ந்து லைம் லைட்டிலேயே இருந்துள்ளனர். அந்த ராசி எமிலியாவிற்கும் தொடர்கிறது. அர்னால்ட் ஸ்வார்ஷ்நெகர் உடன் இவர் நடித்த ‘Terminator Genesys’, 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இந்த ஆண்டு வெளியான ‘Me Before you’ திரைப்படம் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்திருக்கிறது. இதன் மூலம் சின்னத்திரையில் மட்டுமன்றி, வெள்ளித்திரையிலும் ராசியான நடிகையாக எமிலியா பெயர் வாங்கியிருக்கிறார். இவருக்கு நடிப்பைத்தவிர பியானோ, ஃப்ளூட், கித்தார் வாசிக்கவும், பாடவும் தெரியும்.

சென்ற ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மெகா ஹிட் ஆன ‘50 ஷேட்ஸ் ஆஃப் க்ரே’ படத்தில் நடிக்க முதலில் எமிலியாவிடம் பேச்சு வார்த்தை நடந்தது. படத்தில் நிர்வாணக் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்ததால் இந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். ஆனால், தான் நடித்து வெளிவரும், ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரில் தாராளக் கவர்ச்சி காட்டி ரசிகர்களை மகிழ்விக்கத் தயங்கவில்லை. ‘இப்போதைக்கு நடிப்புதான் முக்கியம். இன்னும் திருமணம் பற்றி யோசிக்கவில்லை’ என்கிறார் சமீபத்தில் 30 வயதை நிறைவு செய்திருக்கும் இந்தப் பேரழகி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick