சினிமால்

விஜய் சேதுபதி இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ஒப்புக்கொண்ட படம் ‘விக்ரம் வேதா’. இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி இயக்கும் இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோவாக மாதவன் நடிக்கிறார். தவிர, மூன்று காலகட்டங்களில் மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கிறார் ஜான் விஜய். விரைவில் தொடங்குகிறது இப்படத்தின் ஷூட்டிங். இதுல ஹீரோ யாரு சார்?

அமிதாப் பச்சன் தான் நடிக்கும் ‘சர்க்கார் 3’ படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். ‘ஷமிதாப்’ படத்தில் இளையராஜா இசையில் அவர் பாடிய பாடலைக் கேட்ட ராம் கோபால் வர்மா, ‘நீங்க நிச்சயம் பாடணும்’ என வேண்டுகோள் வைத்தாராம். விடிய விடிய நடித்துக் கொடுத்து, காலையில் ஸ்டூடியோவுக்குப் போய் பாடிக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் அமிதாப். ஆல் இன் ஆல் ராஜா!

ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு ‘4ஜி’ எனப் பெயர் வைத்தால், ஜெய் நடிக்கும் படத்துக்கு ‘4கே’ எனத் தலைப்பு வைத்திருக்கிறார்கள். ‘கனவில் கண்ட காதல் கவிதை’ என்பதன் சுருக்கம்தான் ‘4கே’வாம். கன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சா, சோனாலி ரவுத் என ஜெய்க்கு இரண்டு ஜோடிகள். பேரு பெத்த பேரு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்