நானும் வில்லன்தான் பார்த்துக்க!

`தில்லுக்கு துட்டு' இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கும் படத்தில் வில்லனாக நடிக்க வடிவேலு ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்னு செய்தியைப் படிச்சதும் பக்குனு ஆயிடுச்சு. நம்ம காமெடி சூப்பர் ஸ்டார் எப்படி வில்லத்தனம் பண்ணுவார்னு வழக்கம்போல முந்திரி பக்கோடா சாப்பிட்டுட்டே முக்கால்மணி நேரம் யோசிச்சுப் பார்த்ததில், சிதறிய முத்துக்கள் இதோ...

எல்லா வில்லன்கள் மாதிரியும் `கசகச'னு கத்திக்கிட்டு கத்தி, கடப்பாரையோடு டாட்டா சுமோவில் பறக்க மாட்டார் வடிவேலு. மாறாக, ட்ரை சைக்கிளில் ஸ்டூலைப் போட்டு உட்கார்ந்தோ, மெரினாவில் ரவுண்டடிக்கும் குதிரையை ஆட்டையைப் போட்டோ... அதில்தான் அமர்ந்து செல்வார்.

பெரும்பாலான வில்லன்களைப் போல அடியாட்களை நம்ப மாட்டார். `ச்சூ...'னு சொன்னதும் டைமிங்கில் கடிக்கும் நாய்களையும், கராத்தே பழகிய முரட்டுப் பெண்களையும்தான் அருகில் வைத்திருப்பார். ஏன்னா, அடியாட்கள்கிட்ட இருந்துகூட தப்பிக்கலாம். ஆனால், இவங்க ரெண்டு பேர்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது எனத் தனது அனுபவத்தில் உணர்ந்திருப்பார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick