ஆஃப் த ரெக்கார்டு!

‘பஞ்ச் நடிகர்’ படத்தின் டீசர் ரிலீஸுக்கு முன்பே இணையத்தில் லீக் ஆனது. படக்குழுவே பப்ளிசிட்டிக்காக இணையத்தில் லீக் செய்ததாக முணுமுணுக்கிறார்கள் ஸ்டுடியோவில் வேலை செய்பவர்கள்.

‘பன்ச்’ நடிகரின் ரசிகர் மன்றப் பொறுப்பில் இருந்த பி.ஆர்.ஓ, கேப்டன் கட்சியில் இருக்கும் அதிருப்தி நிர்வாகிகளுக்குப் போன் செய்து, ‘இங்கே சேர்ந்துக்கோங்க. இப்போ இல்லைனாலும், இன்னும் சில வருடத்தில் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு!’ எனக் கூறி அழைத்துவருகிறாராம்.

‘ரன்’ நடிகை திருமணத்துக்குப் பிறகு சில படங்களில் நடிக்கக் கேட்டும் மறுத்துவிட்டார். தற்போது நடிக்க விரும்பும் நேரத்தில் எந்த வாய்ப்பும் அவரைத் தேடி வராததால் அக்கா, அம்மா வேடங்களுக்கும் ஓகே சொல்லியிருக்கிறாராம்.

‘சந்தன’ நடிகர் படம் முழுக்க புலியோடு ஒரு படத்தில் நடிக்க இருந்தார். சமீபத்திய வெற்றிக்குப் பிறகு தீவிரமாக யோசித்த நடிகர், கிராஃபிக்ஸ் புலிக்கான வேலைகள் நடந்து வந்த வேளையில் ‘இந்தப் படம் சரியா வராது’ எனச் சொல்லி டிராப் செய்துவிட்டாராம்.

‘ட்ரிபிள்’ படத்தின் இயக்குநரின் படத்தில் ஹீரோவாக நடித்த விரல் நடிகருக்கு படத்தின் சில காட்சிகளை ஸ்பெஷலாக டிவி டி-யில் கொடுத்தாராம். அதை சில நண்பர்களோடு சேர்ந்து பார்த்திருக்கிறார் விரல் நடிகர். ‘இதெல்லாம் தப்பு ப்ரோ!’ என டென்ஷன் ஆகிவிட்டாராம் இயக்குநர்.

இரண்டாம் தர படங்களில் இரண்டாவது ஹீரோயின் ரேஞ்சில் நடித்து வரும் ‘இனி’மையான நடிகை மலையாள இயக்குநர் ஒருவரைத் தீவிரமாகக் காதலித்து வருகிறாராம். வீட்டில் எதிர்ப்பு வந்தாலும், சீக்கிரமே கல்யாணச் சேதி வருமாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்