ஒய் பிளட்... ஸேம் பிளட்! | Manager Atrocities in Office - Timepass | டைம்பாஸ்

ஒய் பிளட்... ஸேம் பிளட்!

தாகப்பட்டது மக்களே... ஸ்கூல், காலேஜ்ல எல்லாம் நல்லா படிச்சாலோ அல்லது நல்ல மார்க் எடுத்தாலோ, ஏதாச்சும் ஒரு சாக்லேட்டோ இல்ல ஒரு புத்தகமோ தந்து நம்மளை ஊக்கப்படுத்துவாங்க. இந்த ஊக்கப்படுத்துற கான்சப்ட்தான், ஆபீஸ்ல இஸ் ஈக்வல் டூ அப்ரைசல். அப்ரைசல்ங்கிற வார்த்தையைக் கண்டுபிடிச்சு, அதை டிக்‌ஷ்னரியில சேர்த்தது வெள்ளக்காரன்கிறதுனாலயோ என்னவோ, நம்ம நாட்டைவிட அவன் இதை கொஞ்சம் பரவாயில்லாம ஃபாலோ பண்றான்.

அடிச்சுப் பிடிச்சு அப்பாடானு ஒரு வேலையில சேர்ந்தா, அங்க தெரியாததைக் கத்துக்கொடுக்குறோம்னு அவங்களே நெனச்சுக்கிட்டு ட்ரெயினிங் ட்ரெயினிங்னு ஒரு ஆறு மாசத்துல இருந்து ஒரு வருஷம் வரைக்கும் லோலோலோனு லொங்கழிப்பாங்க. ஆட்டத்துல பாதிப்பேரைத் தூக்கத்தான் இந்த கண்துடைப்புங்கிறது, கார்ப்பரேட் சமூகத்துக்கு மட்டுமே தெரிந்த, ஊரறிந்த ரகசியம்.

‘ஹைய்யா ட்ரெயினிங் முடிச்சாச்சு... இனி நாமளும் ஒரு எம்ப்ளாயி’னு குதூகலமா ஆபீஸுக்குக் கிளம்பிப் போக ஆரம்பிச்சா, அங்க ஆரம்பிக்குது அடுத்த ஏழரை. பெர்ஃபார்மன்ஸ் அப்ரைசல்... அதாவது, ஒருத்தரோட வேலைத்திறனைக் கருத்தில்கொண்டு, அவரவர் பதவிக்கு ஏற்றார்போல் சம்பளமானது இன்சென்டிவ்ஸ் உடன் சேர்த்து உயர்த்தப்படும். இதுதாங்க கான்செப்ட்டு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick