க்ளிஷேனு வந்துட்டா வெள்ளைக்காரன்! | Hollywood Movies Cliches - Timepass | டைம்பாஸ்

க்ளிஷேனு வந்துட்டா வெள்ளைக்காரன்!

மிழ்ப் படங்களில் மட்டும்தான் க்ளிஷேவான விஷயங்கள் இருக்கிறதா நினைச்சு மன உளைச்சலுக்கு ஆளாகி, மண்டியிட்டுக் கதற வேண்டாம் மக்களே... ஹாலிவுட் படங்களிலும் ஏகப்பட்ட க்ளிஷேக்கள் உண்டு. அப்படி சூப்பர் ஹீரோ படங்களில் உள்ள க்ளிஷேக்கள் இதோ!

ஹீரோவோ ஹீரோயினைத்தான் லவ் பண்ணிட்டு இருப்பார். ஆனால், ஹீரோயினோ, ஹீரோவோட ஃப்ரெண்டை லவ் பண்ணிகிட்டு இருப்பாங்க. அந்த ஃப்ரெண்ட்தான் அடுத்த பாகத்துக்கு வில்லனாகப் போற விஷப் பயபுள்ளையும்கூட. #கருமத்த!

சக்தி கிடைச்சதும் முதல் வேலையாக பிட்டுத் துணி வாங்கிவந்து டிரெஸ் தைச்சுப் போட்டுக்குவார் ஹீரோ. அந்தச் சட்டையும் ஒரு சண்டையில் கிழிஞ்சுபோக, லாரி டயரை உருக்கி ஊற்றி புது டிரெஸ் உருவாக்கி போட்டுக்கொள்வார். #கெரகத்த!

கிட்டத்தட்ட காதலி கல்யாணத்தில் கார்ப்பெட் விரிக்கிற ‘சூர்யவம்சம்’ சரத்குமாரா வாழ்ந்துட்டு இருப்பார் ஹீரோ. ஆனால், முக்கால்வாசி படத்திலேயே ஹீரோவோட மனசைப் புரிஞ்சுகிட்டு ஹீரோயின் லவ் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க. #என்னத்த!

உலகத்துல எவ்வளவோ ஊர்கள் இருந்தாலும் அமெரிக்காவில்தான் சூப்பர் ஹீரோ உருவாவார். ஹீரோ வீட்டுக்கும் வில்லன் வீட்டுக்கும் ஒரே பால்காரர் பால் போடும் அளவிற்கு ஹீரோ வீட்டில் இருந்து பத்துவீடுதான் தள்ளி இருப்பார் வில்லன். #அச்சத்த!

ஜேம்ஸ்பாண்டும் சூப்பர் ஹீரோக்களும் ஒண்ணு... உசுரே போனாலும் சாக மாட்டாய்ங்க! வில்லனோ, தான் செஞ்ச உப்புமாவைத் தானே சாப்பிடுற மாதிரி, ஹீரோவுக்காக, தான் விரிச்சு வெச்ச வலையில் தானே விழுந்து மர்கயா ஆகிவிடுவார். #மரணத்த!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick