கதை விடுறாங்க!

``அருண் மழைக்காகப் பழைய கட்டடம் ஒன்றில் ஒதுங்கி நின்றான். அப்போது...''  - இந்த ஒரு வரியை டெவலப் செய்து, டைம்பாஸ் வாசகர்கள் சொன்ன குட்டிக்கதைகள் இதோ...

சரண்யன் மணிவேல் : அப்போது கட்டடத்திலிருந்து ஒரு பேய் வந்தது. இப்போதெல்லாம் பேய்கள் காமெடி பண்ண ஆரம்பித்துவிட்டதால், அருண் அந்தப் பேயோடு டைம் பாஸ் பண்ணிவிட்டு, மழை விட்டதும் வீட்டிற்குக் கிளம்பினான்.

கே.எஸ்.பி. முருகவேல் :
அவன் நின்ற இடம் மெளலிவாக்கம். அப்போது அந்தக் கட்டடத்தை இடித்துத் தரைமட்டமாக்க நிறைய இன்ஜினீயர்கள் வருவதைக் கண்டு, அலறியடித்து உடனடியாக இடத்தைக் காலிசெய்தான்.

அருண் திருப்பதி
: நான்தான் அந்த அருண். மழை பெய்ஞ்சதால அவசரத்துல யூரின் பாஸ் பண்ண ஒதுங்கினேன். இதைப்போய் ஃபேஸ்புக் வரைக்கும் கொண்டுவந்துட்டீங்க. இனிமே சாமி சத்தியமா இப்படிப் பண்ண மாட்டேன்.

வினோத் :
அப்போது தனது மொபைலில் ஃபேஸ்புக் பார்த்துக்கொண்டிருந்தான். சென்னையில் நில நடுக்கம் என்ற போஸ்ட்டைப் படித்துக்கொண்டிருக்கும்போதே கட்டடம் அதிர ஆரம்பித்தது. அப்புறமென்ன... கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் சிரித்துக்கொண்டிருந்தான்.

சி.ஸ்ரீராமன் : ஒதுங்கி நின்ற அவனைப் பார்த்து கட்டடத் தொழிலாளி ஒருவர், ''தம்பி இது மழை இல்லை. நாங்கதான் பில்டிங்கை ஷவர் பண்றோம். இடத்தைக் காலி பண்ணு'' என்றார். இதைக்கேட்ட அருண், 'இது தெரியாமல் அரைமணி நேரமா நின்னுக்கிட்ருக்கோமே'' என்றபடி பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

பாலா :
அப்போது அங்கே ஓர் அழகான பெண்ணும் ஒதுங்கி நின்றாள். அருண் அந்தப் பெண்ணிடம் எப்படி பேச்சை ஆரம்பிக்கலாம்னு மனசுக்குள் ப்ராக்டீஸ் பண்ணிக்கிட்டு இருந்தான். ''ஆபீஸுக்கு லேட் ஆகிருச்சு. மழை விட்டதும் என் ஆபீஸ் வரைக்கும் பைக்ல கொண்டுவந்து விட முடியுமா''னு அந்தப் பெண்ணே பேச ஆரம்பித்ததும் அருணுக்கு அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக்கே வந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்