சினிமா விடுகதை!

சைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் ஸோலோ சாங்ஸ்தான் இந்த வார சினிமா விடுகதைக்கான விடைகள் பாஸ். பாடிக்கொண்டே கண்டுபிடியுங்கள்...

1. அம்மா என்றழைக்காத உயிர்கள் உலகில் இல்லை. ஆனால் இவரின் ஹம்மாவை  முணுமுணுக்காத உதடுகளும் இல்லை. பாட்டுக்கு ஆடாத கால்களும் இல்லை. ஆச்சர்யம், இந்தியிலும் மாதாஜி மாறவில்லை. என்ன பாட்டு... சொல்லுங்க பாஸ்?

2. எந்த மேடை ஏறினாலும் இந்த வாக்கியத்தைச் சொல்லாமல் இசைப்புயல் இறங்கியதில்லை. அதையே பல்லவியாக்கி வாலி எழுதிய அழகிய பாட்டு என்ன பாட்டு? 

3. நண்பர்கள் தினத்துக்கான கவலையில்லாப் பாட்டு. எல்லா பிரிவு தினத்திலும் கல்லூரிகளில் இசைக்கும் பாட்டு. ஹைபிட்ச்சில் ரஹ்மான்  தொட்ட  உயரம் மயங்க வைத்தது மக்களை... பாடுங்களேன் பாட்டை...

4. சிறிய இடைவெளிவிட்டு மீண்டும் ரஹ்மான் பாடிய தனிப்பாடல். கிட்டத்தட்ட தனிமைப் பாடல். பிரிவின் ஏக்கத்தை அமெரிக்க வீதிகளில் உறங்கவைத்த பாடல் நம் உறக்கம் கலைக்கும் மெலடி. என்ன பாட்டு?

5. பாப் சிங்கருடன் மேடையேறிய பாட்டு. எது நடந்தாலும் டோன்ட் வொர்ரி என்பதை வேறு மாதிரி சொன்ன பாட்டு வெஸ்டர்ன் வெடி வெடித்தது. என்ன பாட்டு பாஸ்?

6. ஃபேர்வெல் டேவுக்கு மட்டுமல்ல. சும்மா லீவு விட்டாலே கொண்டாட்டம்தான். வைரமுத்துவின் தமிழ் விளையாடிய இந்தப் பாட்டு எல்லா தமிழர்களும் ஜீன்ஸ் போட்டு ஆட வைத்தது... எந்தப் பாட்டு  யோசிங்க?

7. மணிரத்னத்தின் ட்ரையாங்கிள் படங்களில் மூன்றாவது இது. இந்தி டப்பிங் என்றாலும் தமிழிலும் பாட்டு உயிரை உருக வைத்தது. உச்சஸ்தாயியில் ரஹ்மானின் ஜாலம் விண்ணைத் தொட்டது. என்ன பாட்டு?

8. படம் ஈழம் பற்றிப் பேசினாலும் பாட்டு உலக அமைதிக்காக ஒலித்தது. ரஹ்மானின் மெஸ்மரிசம் மென்மைக்கும் உண்டு என்பதை நிரூபித்த பாடல். எந்தப் பாடல்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்