``அர்ஜூனுக்கு `ஆக்‌ஷன் கிங்' பட்டம் கொடுத்தது நான் தான்!''

த்திரிகையாளர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், சினிமா, சீரியல் இயக்குநர் எனப் பன்முகம் கொண்டவர் `யார்' கண்ணன். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிரம்ம ரிஷிமலையில், `உலக நன்மை'க்காக யாகம் நடத்திக் கொண்டிருந்த வருடன் ஒரு சந்திப்பு...

``தஞ்சை மாவட்டம் மதுக்கூரில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் நான். சிறு வயதிலிருந்தே கதை, கவிதைகள் எழுதும் பழக்கம் அதிகம். சினிமா மீதும் ஆர்வம் அதிகம். எப்படியாவது பாடலாசிரியர் அல்லது பத்திரிகையாளர் ஆகவேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்தேன். படிக்கும் காலத்திலேயே `கலை நீதி' என்ற பத்திரிகையில் வேலை செய்தேன். டைரக்டர் மகேந்திரன் சாரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். ஒரு கையெழுத்து தலையெழுத்தை மாற்றும் என்பார்கள், எனக்கு அது நடந்தது!'' மலர்ச்சியோடு ஆரம்பிக்கிறார், `யார்' கண்ணன்.

``1978-ல் சினிமாவில் நுழைந்தேன். உதவி இயக்குநராகப் பணியாற்றிய முதல் படம் `ஏணிப் படிகள்'. இயக்கிய முதல் படம் `யார்'. அர்ஜுன், நளினியை வைத்து இயக்கிய திகில் படம். பிறகு, பாடலாசிரியராகவும் வளர்ந்தேன். இதுவரை 11 படங்கள், அறுபதுக்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியிருக்கிறேன். `யார்' படத்தில்தான் அர்ஜுனுக்கு `ஆக்‌ஷன் கிங்' பட்டம் கொடுத்தேன். தமிழகத்தில் அதிக அளவில் 30x40 போஸ்டர்கள் அடித்து விளம்பரப்படுத்தப்பட்ட முதல் தமிழ்ப்படம் இதுதான். கிராஃபிக்ஸ் இல்லாத காலத்திலேயே அதிக சிரமம் எடுத்து அந்தப் படத்தை உருவாக்கினேன். அந்தப் படத்துக்கு 70 அடி உயர கட்-அவுட் வைக்கப்பட்டது. முதல் முறையாக ஒரு சினிமாவுக்கு இவ்வளவு பெரிய கட்-அவுட் வைத்ததும், `யார்' படத்திற்குத்தான்'' என `யார்' சிறப்புகளை இன்னும் ஆச்சர்யமாகப் பேசுகிறார், கண்ணன்.

``அமானுஷ்யம் மூலமாகப் பிரபலம் ஆனவர் நீங்கள். திடீரென ஆன்மிகப் பாதையைத் தேர்ந்தெடுக்கக் காரணம்?''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick