``ஜாலியா இருங்க ஜி!'' | Dierctor Muruganantham Interview - Timepass | டைம்பாஸ்

``ஜாலியா இருங்க ஜி!''

``காமெடிக்கும் கிண்டலுக்கும் நம்ம அத்தை பொண்ணை வம்பிழுக்கிறதுக்கும், யாருன்னே தெரியாத பொண்ணை வம்பிழுக்கிறதுக்கும் இடையில உள்ள வித்தியாசம்தான். வார்த்தைகள் யாரையும் காயப்படுத்திடக் கூடாதுங்கிறதுல கவனமா இருப்பேன்.” - பேச்சில் தெக்கத்தி வாசனை தெறிக்கப் பேசுகிறார், தன்  உடல்மொழியின் மூலம் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் சேர்ந்திருக்கும் முருகானந்தம். `சூப்பர் ஜி... சூப்பர் ஜி' என `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'வில் நடிகராக அறிமுகமானவர், இப்போது விஷ்ணு விஷால் நடிக்கும் `கதாநாயகன்' படத்தின் இயக்குநர்!

``முதல்ல நடிகரா அறிமுகம் ஆனது திட்டமிட்டு நடந்த விஷயமா?''

``இல்லை. தற்செயலா நடந்ததுதான். சொந்த ஊரு பரமக்குடி. விக்ரமன் சார்கிட்ட அசிஸ்டென்ட்டா இருந்தேன். `கலாபக் காதலன்' படத்துல இணை இயக்குநரா வேலை பார்த்தேன். சினிமா நண்பர்கள் எல்லாம் வழக்கமா சந்திச்சுப்போம். கோகுல் `இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா' படம் டிஸ்கஷன் பண்றப்போ, `வாங்க ஜி...'னு சொல்ற கேரக்டருக்காக ரெண்டு, மூணு பேர்கிட்ட ஆடிஷன் பண்ணோம். நான்தான் எப்படி அந்தக் கேரக்டர் பெர்ஃபார்ம் பண்ணணும்னு சொல்லி, நடிச்சுக் காட்டினேன். திடீர்னு கோகுல், `நீயே இந்தக் கேரக்டரைப் பண்ணு நண்பா'னு உரிமையா சொன்னார். `வேணாங்க. டைரக்ட் பண்ண வந்துட்டு, நடிக்க ஆரம்பிச்சா இப்பிடியே போயிடும்'னு சொன்னதைக் கேட்கலை. அந்தக் கேரக்டருக்காக எனக்குக் கிடைச்ச கைதட்டல்கள் எல்லாம் கோகுலுக்குத்தான் போய்ச்சேரும்!''

``உங்க உடல்மொழிக்குத் தியேட்டர்ல ரெஸ்பான்ஸ் கவனிச்சீங்களா?''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick