`கயல்' ஜமீன்தாரும் `கலைஞர்' டிவியும்! | Pereraa Interview - Timepass | டைம்பாஸ்

`கயல்' ஜமீன்தாரும் `கலைஞர்' டிவியும்!

காவிரித் தண்ணீருக்காகக் கட்சிக்காரர்கள் ரயில் மறியல் செய்து பரபரப்பை ஏற்படுத்திய வேளையில், `தொடரி'யில் தன் கட்சிக்காரருக்காக ரயில் மறியலில் இறங்கி எல்லோரையும் கிச்சுகிச்சு மூட்டிய ஃப்லோரென்ட் பெரெராவிடம் பேசினேன்.

``சினிமா என்ட்ரி எப்படி?''

``2003-ல் டைரக்டர் ஜெகன் இயக்கத்தில் விஜய் நடித்த `புதிய கீதை' படத்தில் சி.பி.ஐ. ஆபிஸராக நடித்தேன். ரபி பெர்னாட்டைத்தான் அந்த வேடத்தில் நடிக்கவைக்கக் கேட்டிருக்கிறார்கள். அவரோ, `நான் உயரம் குறைவாக இருப்பேன். என்னை எப்படி சி.பி.ஐ. ஆபீஸராக ஏற்றுக்கொள்வார்கள்' என்றதோடு, அவரது தொலைபேசி எண்ணை வழங்கிய என்னையே `அந்த ரோலுக்கு, அவர் சரியாக இருப்பார்' என்று கூறினார். இப்படித்தான் `புதிய கீதை'யில் என்ட்ரியானேன்.''

`` `புதிய கீதை'க்குப் பிறகு ஏன் இவ்வளவு இடைவெளி?''

``உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சினிமாவிற்காக எந்த முயற்சியும் செய்யவில்லை. நான் தொலைக்காட்சிகளில் 1995-ம் ஆண்டு முதலே பணி செய்து வருகிறேன். கலைஞர் தொலைக்காட்சியின் `நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசன் இறுதியிலும் நடைபெறும் விழாவில், கலைஞர் தொலைக்காட்சி சார்பாக பொதுமேலாளர் என்ற முறையில் வரவேற்புரை நிகழ்த்துவேன். அப்படி ஒரு நிகழ்ச்சிக்கு, இயக்குநர் பிரபுசாலமன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார். அன்று நான் பட்டு வேஷ்டி, முண்டாசு, சில்க் சட்டை காஸ்டியூமோடு மேடையில் தோன்றினேன். அடுத்தநாள், பிரபு சாலமனின் மானேஜர் போன் செய்து `கயல்' படத்தில் ஜமீன்தாராக நடிக்க வேண்டும் என்றார். நடித்தேன்.

அப்படி ஆரம்பித்த அடுத்த இன்னிங்ஸ் தொடக்கம், இப்போது 20 படங்களைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. அதில் `தர்மதுரை', `தொடரி', `ராஜா மந்திரி', `காஷ்மோரா' வெளியாகிவிட்டன. மேலும், `இடம் பொருள் ஏவல்', `புரியாத புதிர்', `தரமணி', `முப்பரிமாணம்', `செய்', `என்கிட்ட மோதாதே', `மாவீரன் கிட்டு', `திரி', `முடி சூடா மன்னன்' ஆகிய படங்களில் நடித்துள்ளேன். இவை விரைவில் திரைக்கு வர உள்ளது. டைரக்டர் ஷங்கரின் `2.0' படத்திலும் நடிக்க அழைப்பு வந்துள்ளது.''

`` `கயல்' படத்தில் காதலுக்கு எதிர்ப்பு... `தர்மதுரை'யில் காதலுக்கு ஆதரவு. உண்மையில் காதலில் உங்கள் நிலைப்பாடு?''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick