ஆஃப் த ரெக்கார்டு!

ற்கெனவே கண்டித்தும் ‘பிரமாண்ட’ படத்தில் நடித்து வரும் நடிகை, தனது அரை நிர்வாணப் படங்களை இணையத்தில் பதிவிடுவது இயக்குநருக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம். வெளியான ஸ்டில்களால் படத்தின் கேரக்டர் பாதிக்கப்படும் எனக் கவலைப்படுகிறாராம்!

‘கவலை’யான படத்தை விளம்பரப்படுத்த ‘இனிப்புக் கடை’ நடிகையை அழைத்து வந்தாராம் தயாரிப்பாளர். வந்த இடத்தில் ‘கோட்’ நடிகரைப் பற்றியும், அவருடன் நடிக்கும் படத்தைப் பற்றி மட்டும் பேசி ‘கவலை’ படத்தை மேலும் கவலைக் குள்ளாக்கி விட்டதால், `பப்ளிசிட்டிக்குக் கொடுத்த பணம் போச்சே!' என வருத்தத்தில் இருக்கிறாராம், தயாரிப்பாளர்.

திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை நிறுத்தி விட்டுப் போன ‘வாளமீன்’ நடிகை, தன் முன்னாள் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு புதிய ஃபோட்டோக்களை அனுப்பி, அக்கா, அண்ணி வேடங்களுக் கும் ரெடி என வாய்ப்பு கேட்கிறாராம்.

‘பச்சை’ தயாரிப்பாளர் தன் ஒவ்வொரு படத்தையும் புரமோஷன் செய்ய சினிமாவுக்குச் சம்பந்தமே இல்லாத சிலரை அழைத்துத் தனியாக டிரைலர் போட்டுக்காட்டுவது சம்பந்தப்பட்ட படத்தின் இயக்குநர்களுக்குக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. `வேற வழி?' என நொந்து கொண்டுதான் தலையாட்டி கொண் டிருக்கிறார்களாம், அனைவரும்.

`இருவன்'களுடன் நடித்த படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டதால், கைவசம் தமிழ்ப்படங்கள் இல்லை. `பப்ளி' நாயகிக்கு! சிறிய இடைவெளி விழுந்தாலும் ஆபத்து என்பதால், தெலுங்கில் கிடைத்த ஒரு சிறிய பட்ஜெட் படத்தை உடனே ஓகே செய்துவிட்டார்.

‘ஃபைட்’ படத்தில் `புயலும் புரோட்டா'வும் நடித்துள்ளனர். இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளை வைக்க இயக்குநர் ரொம்பவே ஆசைப்பட்டாராம். ஆனால் புயலோ, மறுத்ததோடு, `நான் ஸ்பாட்ல இருக்கிறப்போ என் எதிர்லகூட அவர் வரக்கூடாது' எனக் கட்டளை போட்டாராம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்