பயம்னா மட்டும் பயம்!

`பயமா எனக்கா? நாங்கெல்லாம் சுனாமியிலேயே ஸ்விம்மிங்கைப் போடுறவய்ங்க'னு என்னதான் `ஆடுகளம்' தனுஷ் மாதிரி பசங்க வசனம் பேசினாலும், சின்னச் சின்ன விஷயங்கள்கூட அவங்க அடிமனசுல மரணபீதியை ஏற்படுத்தும். அதெல்லாம் என்னன்னு பொறுமையா சொல்றேன். பயப்படாமல் கேளுங்க...

வீட்டில் அக்காவோ, தங்கச்சியோ அதிசயமா காய்கறி நறுக்கிட்டு இருக்கிறதைப் பார்த்தாலே பசங்களுக்கு `குப்'னு வேர்க்கும். அதிலும் முருங்கைக்காய் சாம்பார் வைக்க பச்சை மிளகாய் நறுக்கிட்டு இருக்கிறதைப் பார்க்கும்போதெல்லாம்  `கொலைப்பசியோட இருக்கிறவனை, கொலை பண்ண பிளான் பண்றாங்க. இன்னைக்கு பச்சத்தண்ணியைக் குடிச்சே பசியாறிக்குவோம்'னு மனசுக்குள்ள ஒருவித கிலி ஏற்படும். உண்மைதானே..?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick