கதை விடுறாங்க!

"புதிதாக வேலைக்குச் சேர்ந்த அலுவலகத்தில் படியேறிக் கொண்டிருந்தாள் கீதா. அப்போது..." - இந்த ஒரு வரியை டெவலப் செய்து, டைம்பாஸ் வாசகர்கள் சொன்ன குட்டிக்கதைகள் இதோ...

இம்ரான் இம்மு: படியில் தண்ணீர் இருப்பது தெரியாமல் காலை வைத்து வழுக்கி விழும் தருணத்தில்... பார்த்திபன் அவளைத் தாங்கிப் பிடித்தான். இருவர் கண்களும் நேருக்கு நேர் பார்த்தபோது, "கண்கள் இரண்டால்...'' என்று அவன் அலைபேசி சிணுங்கியது.

பாலமுருகன்: அப்போது புதிய ஐ-போன் ஒன்று கீழே கிடந்தது. அதை எடுத்தவள், நேராக மேனேஜர் அறைக்குச் சென்று அவரிடம் போனைக் கொடுத்தாள். அதைப் பாராட்டிய அவர், `இது வெறும் டெமோ பீஸ்தான். பர்சேஸிங் கம்பெனிகள்ல இருந்து கமிஷன் வாங்காம, சரியா நீ வேலை பார்ப்பேனு எங்களுக்கு நம்பிக்கை வந்திருச்சு' எனச் சொன்னார்.

சண்முக சுந்தரம்: அவளின் பின்னால் வந்த இளைஞன், "மேடம் இந்தக் கவர்ல ஐம்பதாயிரம் பணம் இருக்கு. அந்த மன்னார் அண்ட் கம்பெனி ஃபைலை மட்டும் சீக்கிரம் மூவ் பண்ணுங்க ப்ளீஸ்'' என்றவுடன் அவனைக் கண்டபடி திட்டி, அவன் கையிலிருந்த கவரை அவன் முகத்தின் மேல் எறிந்துவிட்டுத் திரும்பினாள். வெளியே வந்த அந்த இளைஞன் போனை எடுத்து லைனில் இருந்தவனிடம், "மணி! உனக்குப் பார்த்த பொண்ணும் உன்னை மாதிரியே நீதி, நியாயம்னுதான் இருக்கா. ஜாதகம் பொருந்தியாச்சு... கேரக்டர் பொருந்தியாச்சு. இனிமே டும்டும்டும்தான்'' எனச் சிரித்தபடியே பைக்கை ஸ்டார்ட் செய்தான் மணியின் தோழன் சிவா.

லூயிஸ் செல்வராஜ்: அவளுக்கு முன்னால் படியேறிக்கொண்டிருந்த மேனேஜர் படி நுனியில் கால் வைத்து வழுக்கி விழப்போய் சுதாரித்ததைப் பார்த்தாள். பார்ட் டைம் வேலையாக தான் விற்றுக்கொண்டிருந்த ஆன்ட்டி ஸ்லிப் டேப் பற்றி விளக்கி உடனடியாக ஆர்டர் எடுத்தாள். வியந்துபோன மேனேஜர், அன்றே கீதாவை விற்பனைப் பிரிவிற்கு மாற்றி புரமோஷன் கொடுத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick