கறுப்புப் பணமே வெளியே வா!

ரே நைட்ல ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எதுவுமே செல்லாதுனு சொன்னதும் கூட்டம் கூட்டமா சில்லறை மாத்தக் கிளம்பினவங்களுக்கும், ஏ.டி.எம். போனவங்களுக்கும், அர்த்த ராத்திரியில வந்த அட்சய திரிதியை கணக்கா நகைக்கடைக்குப் போனவங்களுக்கும், 12 மணிக்கு ஒயின் ஷாப் போனவங்களுக்கும், உலகமே அழிஞ்சாலும் எனக்கென்ன கவலைனு வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போனவங்களுக்கும் ஒரே ஒரு விஷயம்தான் சொல்லணும். ‘அச்சம் என்பது மடமையடா, ஐந்நூறு ரூபா வெச்சிருக்கிறவன் மடையனடா'! ஐந்நூறு, ஆயிரம் எல்லாத்தையும் ஒழிச்சிட்டா கறுப்புப் பணமெல்லாம் கஞ்சி போட்டு அயர்ன் பண்ண கதர் வேட்டி கணக்கா கலர் மாறிடும்னு இன்ஜினீயரிங், மெடிசின் படிச்ச பொருளாதார நிபுணர்கள் எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கிறதால கறுப்புப் பணத்தை வேற எப்படில்லாம் ஒழிக்கலாம்னு சில ஐடியாஸ். ஐந்நூறு, ஆயிரத்தை ஒழிச்சா கறுப்புப் பணம் வெளியே வருமான்னு தெரியலை பாஸ். இதைப் ஃபாலோ பண்ணா கண்டிப்பா வெளியே வரும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick