புதுமாப்பிள்ளைனா என்ன தொக்கா?

ல்யாணம் நடந்து சில மாதங்களே ஆன, புத்தம் புது மாப்பிள்ளைகள் அடிக்கடி காதில் கேட்கும் டார்ச்சர் டெம்ப்ளேட் கேள்விகள் இவைதான். இந்தக் கேள்வியெல்லாம் கேட்கும்போது மனசுக்குள்ள பதில் அருவி மாதிரி கொட்டும். ஆனால், வெளியே சொல்லணும்னு நினைக்கும்போதுதான் ஏனோ முட்டும்!

``புது மாப்பிள்ளை... லைஃப்லாம் எப்படிப் போகுது?'' (அருமையா போகுது. வேற வேற... மைக்கை அவர்கிட்ட கொடுங்க!)

``இனிமே தினமும் வீட்டுச்சாப்பாடுதான்!'' (ரெடிமேட் குழம்பு வாங்க கடை கடையா ஏறி இறங்கினது எனக்குத்தான்யா தெரியும்)

``அதுக்குள்ளே தொப்பை எல்லாம் போட்டுருச்சு...'' (அடேய்... இது பீர் அடிச்சு வந்த தொப்பைடா. எட்டு மாசமா என் வயித்துலதான்டா இருக்கு)

``புது மாப்பிள்ளை வீட்டுக்கு சீக்கிரம் போறது இல்லையா?'' (விட்டா போக மாட்டேன்னா சொல்றேன். அவ்வ்...)

``அப்புறம் ஏதாவது நல்ல செய்தி?'' (யோவ்... கல்யாணம் நடந்தே மூணு நாள்தான்யா ஆகுது)

``பெரிய மனுஷன் தோரணை வந்துடுச்சு...'' (தள்ளுங்க ப்ளீஸ்... பஞ்சு மிட்டாய் வாங்கப்போறவனை டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு!)

``கையில, கழுத்துல எல்லாம் பளபளங்குது...'' (ஆமாம், கை காலை வார்னீஷில் முக்கி எடுத்தேன்)

``ஹனிமூன் எங்கிட்டு? ஊட்டியா? கொடைக்கானலா?'' (கட்டுச்சோறு கட்டிக்கிட்டு வண்டலூர் ஜூவுக்குப் போறோம்!)

``என்ன புது டிரெஸ்ஸா?'' (போன தீபாவளியப்ப நீ ஊதுபத்தியால் ஓட்டை போட்டியே... அதே சட்டைதான்டா)

``கல்யாண ஆல்பம் வந்துடுச்சா?'' (அந்த போட்டோகிராஃபரைத்தான் நானும் தேடிட்டு இருக்கேன்!)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்