சூப்பரோ சூப்பர் மார்க்கெட்!

ம் ஊரில் நாள்பட்ட சரக்குகளை `ஆஃபர்' என்கிற பெயரிலும், `ஸ்டாக் கிளியரன்ஸ் சேல்' என்கிற பெயரிலும் விற்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் டென்மார்க் நாட்டின் ஹோபன்ஹேகன் நகரத்தில் `வீ ஃபுட்' என்கிற ஒரு சூப்பர் மார்க்கெட் செய்திருக்கிற ஒருவேலையோ உலகின் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. ஆம், சாப்பிடுகின்ற உணவுப்பொருள்கள், அழகுசாதனப்பொருட்களைக் காலாவதியாகி வீணாவதற்கு முன்பாகவே 30 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் விற்பதற்கென்றே தொடங்கப்பட்டிருக்கிறது, இந்த சூப்பர் மார்க்கெட்!

இதுபோல ஒரு சூப்பர் மார்க்கெட் தொடங்கப்படுவது உலகத்தில் இதுதான் முதன்முறை என்கின்றனர். டென்மார்க்கில் இருக்கும் `ஃபுட் பேங்க்' அமைப்பாலும், `டான்சர்ச் எய்ட்' எனும் தொண்டு நிறுவனத்தாலும் சேர்ந்து நடத்தப்படும் இந்த மார்க்கெட்டின் வருமானத்தைக் கிழக்கு சூடான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் வாழ்கின்ற ஏழை மக்களுக்காக  உதவிசெய்து வருவதாகக் கூறுகிறார்கள். `உணவு வீணாதலை' குறைக்கும் விதமாக டென்மார்க் முழுவதும் இதுபோல கிளைகளைத் தொடங்க டான்சர்ச் எய்ட் தயாராகி வருகின்றது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick