சினிமால்

   `இருமுகன்' படத்தை அடுத்து `சாமி2'-ல் நடிக்க நினைத்திருந்த விக்ரம், `கருடா' படத்தை டிராப் பண்ணினார். `சாமி' தொடங்கக் கொஞ்சம் டைம் ஆகும் என்பதால் 4 வருடங்களுக்கு முன்பு டிராப்பான `கரிகாலன்' படத்தின் தயாரிப்பாளருக்கு அந்த கால்ஷீட்டைக் கொடுத்திருக்கிறாராம். `பிரம்மன்' இயக்குநர் சாக்ரடீஸ், `சேதுபதி' அருண்குமார் ஆகிய இருவரில் ஒருவர்தான் அந்தப் படத்தை இயக்க இருப்பவராம். `கருடா'வில் மிஸ்ஸான காஜல் அகர்வாலை இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்யச் சொல்லிவிட்டாராம் விக்ரம். கருடப்பார்வை, மிஸ் ஆகாது!

    இயக்குனர் விஜய்யைப் பிரிந்த பிறகு, மீண்டும் பழைய வேகத்துடன் படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார் அமலா பால். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் நடிக்கிறார். தமிழில் `வடசென்னை' படத்தைத் தொடர்ந்து சத்யராஜுக்கு ஜோடியாக `முருகவேல்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக அமலா பால் நடித்த ‘லைலா ஓ லைலா’ படத்தின் ரீமேக்தானாம் இது. சீனியர் ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க தயக்கம் ஏதும் இல்லையாம். நீ பொழைச்சுக்குவமா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்