போதைக்காதல்... பேதைப்பெண்!

போதைக்கு அடிமையாகி வாழ்வைத் தொலைத்த பெண்ணைப்பற்றிய வீடியோ ஆல்பம்தான் `போதைக்காதல்’! மதன் கார்க்கியின் மியூஸிக்கல் இணையதளமான ‘doopadoo’வில் இளைஞர்களிடையே லைக்ஸை அள்ளிக்கொண்டிருக்கிறது. பாடலின் முதல் ஷாட்டிலியே வாயில் சிகரெட்டோடு காதலும் போதையுமாக மிரள வைக்கிறார் அஞ்சனா! கேரளத்து வரவு அஞ்சனாவுடன் ஒரு ஜாலி அரட்டை...

``உங்க பயோடேட்டா?’’

``வயசு 23. உயரம் 5.5. சொந்த ஊரு கோட்டயம். ப்ளஸ்டூ வரைக்கும் துபாயில படிச்சேன். காலேஜ் எல்லாம் கோயம்புத்தூர்ல,  ஃபேஷன் டெக்னாலஜி முடிச்சேன். படிக்கும்போதே நிறைய குறும்படங்கள் வாய்ப்பு வந்தது. `மியூஸ்’ னு ஒரு குறும்படம் பண்ணினேன். விலைமாது கேரக்டர்ல நடிச்சிருந்தேன். நேஷனல் அவார்டு ஷார்ட் ஃபிலிம் கேட்டகரில ஃபைனல் வரை வந்தது.  நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. பிரபல டைரக்டர் மகேந்திரன் சார் `மியூஸ்’ பார்த்துட்டு, `ரொம்ப இயல்பா நடிச்சுருக்கம்மா’ன்னு பாராட்டுனாங்க. அதான் நடிக்கலாம்னு முடிவு பண்ணினேன்.’’

``போதைக்காதல்... எப்படி இருந்துச்சு அதோட அனுபவம்?’’

``இன்னிக்கு இருக்குற ஜென் z  லவ் பத்தின ஆல்பம் இது. போதையின் பிடியில இருக்குற ஒரு பொண்ணைப் பத்தின ஆல்பமா இருந்ததால நிறைய ஹோம் ஒர்க் செஞ்சு நடிச்சேன். நம்புங்க நான் பார்ட்டி பண்ணாத பொண்ணு. அதனால ஆரம்பத்தில இதுல நடிக்க ரொம்ப தயக்கமா இருந்துச்சு. அப்புறம் நடிப்புனு வந்துட்டா சவாலைச் செய்றதுலதானே த்ரில். நிறைய ரெஃபரன்ஸ் எடுத்துப் பண்ணினேன். ரிசல்ட் பார்த்திட்டு சந்தோஷமா ஃபீல் பண்றேன்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick