நாயகி - விமர்சனம்

பேய் தன்னைக் கொன்னவன பழிவாங்குறத பாத்திருப்பீங்க... தன் குடும்பத்துக்காகப் பழி வாங்குறத பாத்திருப்பீங்க... கிச்சு கிச்சு மூட்டுற பேயைப் பாத்திருப்பீங்க. பெண்களுக்கு எதிராக அநீதி செய்யறவங்களைக் கொல்லும் பேயைப் பாத்திருக்கீங்களா? பாத்திருக்கீங்களா? அவ தான் `நாயகி'.

கதைனு ஒண்ணு சொல்லியிருக்காங்க... காயத்ரிக்கு (த்ரிஷா) சின்ன வயதிலிருந்தே நடிகை ஆகணுங்கறதுதான் லட்சியம். அதுக்காக த்ரிஷாவுடைய அப்பா ஜெயபிரகாஷ் தயாரிப்பாளர் கிட்ட அழைச்சுட்டுப் போறார். ஆனா, அவரு சில பலான கண்டிஷன் போட கோபமாகிக் கிளம்பிடறாங்க. அப்போதான் கணேஷ் வெங்கட்ராம் என்ட்ரி ஆகி `வாவ்... உங்கள மாதிரி ஒரு பொண்ணத்தாங்க நான் தேடிக்கிட்டிருந்தேன். என் ஃப்ரெண்டோட படத்தில் நீங்கதான் ஹீரோயின்’ எனச் சொல்லிப் பழக ஆரம்பிக்கிறார். ஆனா கடைசியாதான் தெரியுது கணேஷ் வெங்கட்ராம், தன்னோட ரேப் ரெக்கார்டுல 100வது பொண்ணா த்ரிஷாவ செலக்ட் பண்ணியிருந்திருக்கார்னு! த்ரிஷாவ கெடுத்து கொலைபண்ணி, ஜெயப்பிரகாஷையும் கொலை பண்ணி, பார்க்குற நம்பளையும் கொலை பண்ணும் இந்த ஃப்ளாஷ்பேக் இன்டர்வெல்லுக்குப் பிறகு வரும். நடிகை ஆக முடியலையேங்கற ஆதங்கத்தோட இறந்து போய் பேயா மாறின த்ரிஷாவுக்கு அம்மன் அருளால ஒரு சக்தி கிடைக்குது. அது என்னென்னு கடைசில சொல்றேன். கதையா...? இருந்தா சொல்றேன்!

படத்தில் சில ஹைலைட்ஸ் இருக்கு பாஸ்.

* அம்மன் மூலமா த்ரிஷாவுக்கு ஒரு பவர் கொடுக்கும் காட்சி அவதார் கிராஃபிக்ஸுக்கே டஃப் கொடுக்கும். இந்தப் பவரை கணேஷ் ரேப் பண்றதுக்கு முன்னாலயே த்ரிஷாவுக்குக் கொடுத்திருந்தா (ஆடியன்ஸ் உட்பட) எல்லாரும் தப்பிச்சிருப்பாய்ங்கள்ல... கடவுளே உனக்குக் கருணையே இல்லையா?

* `பேயை வெச்சு காமெடி பண்ணி பண்ணி உங்களுக்குப் பேய்மேல பயமே இல்லாம போயிடிச்சில்ல' என ஒரு வசனத்தை வைத்து சமகால சினிமாவைப் பகடி செய்திருக்கிறார் இயக்குநர். ஆனா, இந்தப் படமே ஒரு... சரி விடுங்க!

* இதை எல்லாம் விட பெரிய ஹைலைட். `இந்தப் படம் நல்லா இல்லங்கறதால தான் நான் இதைப் பிரமோட் பண்ணவே இல்ல. எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். இதற்காக என்னை மன்னித்துவிடுங்கள்' இதை த்ரிஷாவே தன்னுடைய ட்விட்டரில் சொன்னதுதான். அவங்களே டென்ஷன் ஆகிட்டாங்க பாவம்!

பவர் பவர்னு சொன்னேனே அது என்ன பவர் தெரியுமா?

ஜெயப்பிரகாஷ் ஆவி சாதாரணமா பார்த்தாலே தெரியும். ஆனா, த்ரிஷாவுடைய ஆவிய சாதாரணக் கண்ணால பார்க்க முடியாது. கேமரா வழியா பார்த்தா மட்டும்தான் அவங்க ஆவி தெரியும். ஏன்னு தெரியுமா? நடிகை ஆகணும்னு ஆசைப்பட்டு இறந்தாங்கல்ல... அதனால! எப்பூடி!

- தரை டிக்கெட்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்