ரியல்... டரியல்! | College Comedies - Timepass | டைம்பாஸ்

ரியல்... டரியல்!

காலேஜ் லைஃப் எல்லோருக்கும் முக்கியமான அத்தியாயம். இதுவரைக்கும் சினிமாவுல கொஞ்சமும், பக்கத்துவீட்டு அண்ணனுங்க, அக்காங்க சொல்லி கொஞ்சமுமா காலேஜைப் பத்தி அரைகுறையா  தெரிஞ்சுக்கிட்டு உள்ளே நுழைவோம். அங்கே நமக்குக் கிடைக்கிற பல்பைப் பார்ப்போமா..?

புதுசா எடுத்த சட்டை, ஜீன்ஸ் பேன்ட்டு, பேக்னு எல்லாத்துலயும் பிரஸ் டேக் எஃபக்ட்டோட ஒரு வாக்கப் போட்டுப் போவோம். உள்ள நமக்குனே வெயிட் பண்ணிட்டிருக்குற எவனாவது நக்கலா ஒரு சிரிப்பைப் போட்டு நமக்குள்ள முழிச்ச ஹீரோவ மறுபடி படுத்த படுக்கையாக்குவான். நாமளும் சுத்தி எவனும் பாக்குறானானு பார்த்துட்டு நடையப்போடுவோம். அங்க இருக்க மூஞ்சிங்கள்ல எவனாது தேர்றானானு பார்த்து அவன்ட, “அண்ணே! இங்க (டிபார்ட்மெண்ட் பேரச் சொல்லி) ஃபர்ஸ்ட் இயர் கிளாஸ் எங்க இருக்கு?”னு கேட்போம். உடனே அவன் ஒரு லுக்க விடுவான். `எதுக்கு இப்பிடிப் பாக்குறாரு?'னு வடிவேல் மாதிரி யோசிப்போம். `டேய் உனக்கு வேற டிப்பார்ட்மென்ட்டே கிடைக்கலயாடா?'னு நொந்துகிட்டே `அந்தப் பக்கமா போ'னு சொல்லுவான். `நான் என்ன ஆசப்பட்டாடா இந்த டிப்பார்ட்மெண்ட்ல சேந்தேன். வேற எதும் கிடைக்கலயேடா'னு மனசை சமாதானப்படுத்திக்கிட்டே கிளாஸ்க்குள்ள நுழைவோம். அங்கே போனதும் டமார்னு நெஞ்சு வெடிச்சுச் சுக்குநூறாகும். பின்ன இருக்குறதுலேயே சப்ப பீஸுங்களா பார்த்து கிளாஸ்ல போட்டுருந்தா எவனுக்குத்தான்யா மனசு வெடிக்காது?

சரி போகட்டும் பாத்துக்கலாம்னு உள்ள போய் உக்காருவோம்னு கடைசி பெஞ்சப் பார்ப்போம். அது ஆல்ரெடி ஹவுஸ்புல்லாகியிருக்கும்(என் இனமடா நீங்கள்லாம்). மூணாவது பெஞ்ச்ல ஒரு வேகன்ஸி இருக்கும் அங்க போய் உட்க்காந்து பக்கத்துல இருக்கவன்ட பேசலாம்னு பார்ப்போம். அவன் வந்தன்னிக்கே லைப்ரேரில இருந்து புக்க எடுத்துட்டு வந்து நோட்ஸ் எடுத்திட்டிருப்பான் (யாருமே இல்லாத பார்ல யாருக்குடா பீர் வாங்கி வெச்சுருக்க?) `இப்பிடி ஒரு காலேஜ்ல வந்து சிக்கிட்டோமே ஆண்டவா'னு நெனைக்கிறப்ப வெளில இருந்து ஒருத்தன் ஓடிவந்து  “லெக்சரர் வர்றாரு”னு சொல்லுவான். (எல்லாரும் தாழ்வான பகுதிய நோக்கிப் போங்க... நம்பள நோக்கி ஒரு பெரிய ஆபத்து வருது மொமண்ட்!) அவரு வந்ததும் வராததுமா, “எங்க ஒவ்வொருத்தரா எழுந்து செல்ஃப் இன்ட்ரோ பண்ணிக்கோங்க''னு அவிச்ச கடலையவே திரும்ப அவிப்பாரு. எல்லாப்  பயலுகலும் எழுந்து, ``மை நேம் இஸ் பார்த்தா... ஐயாம் கம்மிங் ஃபிரம் மைலாப்பூர்''னு ஓகே ஓகே சந்தானத்தை மிஞ்சற அளவு இங்கிலீஸ்ல காமெடி பண்ணுவானுங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick