கொக்கிபீடியா!

ருப்பக்கம் கொக்கி போட்டு திருவிழாவுக்கு கரெண்ட் எடுக்குறதுபோல வேற மாதிரி விக்கிபீடியாவுக்காகத் தகவலைத் தொகுத்திருக்கோம். அதான் இந்த கொக்கிபீடியா..!

பெயர்: ஜெ.ஜெயலலிதா

பிறப்பு: 24 பிப்ரவரி 1948

வயது: 68

இருப்பிடம்: போயஸ் கார்டன்

19-வது தமிழ்நாட்டு முதலமைச்சர்

ஜெ.ஜெயலலிதா என்பவர் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்திய நடிகையும் ஆவார்.

திரையுலகப் பங்களிப்பு:

இவர் ‘வெண்ணிற ஆடை’ என்கிற படத்தின் மூலம்தான் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். ‘பக்பக் ப்ட்ரூ...’ என அடிக்கடி உச்சரிக்கும் வெண்ணிற ஆடை மூர்த்தியும் இதே படத்தில்தான் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். குறிப்பாக எம்.ஜி.ஆரிடம் ஓவராக வாய்பேசி வாங்கிக் கட்டிக்கும் கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்திருக்கிறார். ‘ஆடாமல் ஆடுகிறேன்...’ பாடலின் இறுதிக்காட்சியில் கிர்டு கிர்டு எனச் சுற்றி, கீழே விழும் காட்சியில் அவ்வளவு தத்ரூபமாக நடித்திருப்பார். இதுவரை 127 படங்களில் நடித்திருக்கும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆருடன் மட்டும் 28 படங்களில் நடித்திருக்கிறார். இன்றும் இவர் நடித்த படங்களும் பாடல்களும் ஒரு நல்லநாள், நடுராத்திரி எனப் பாராமல் எல்லா நேரத்திலும் ஜெயா தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்.

சட்டமன்றப் பொறுப்புகள்:


தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் பெண் எதிர்கட்சித் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார்.

தமிழக முதல்வராக ஆறு முறை தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick