போய்யா என் மீம்ஸு!

ருக்குள் நாளைய இயக்குநர்கள் போய் இப்போ மீம் க்ரியேட்டர்கள் அட்ராசிட்டி அதிகமாகிடுச்சு. சோஷியல் மீடியாவைத் திறந்து பார்த்தால், திரும்புகிற பக்கமெல்லாம் மீம்ஸாதான் இருக்கு. ஆத்தி... சில மீம் கிரியேட்டர்கள் நம்மை குபீர்னு சிரிக்க வெச்சாலும், தன்னை மீம் கிரியேட்டர்னு சொல்லிக்கிற பலர் பண்ற டார்ச்சர்கள் இருக்கே... அவ்வ்வ்!

   மீம் கிரியேட்டரா ஃபார்ம் ஆக வல்லாரை, வெண்டைக்காய்னு சாப்பிட்டு மூளையை 30 கிராம் எக்ஸ்ட்ரா வளர்த்துக்கணும்னு அவசியமில்லை. `வேலையில்லா பட்டதாரி' படத்தில் தனுஷ் போனை நோண்டிட்டு நிற்கிற ஸ்டில்லைப் போட்டு கீழே எதை எழுதிவிட்டாலும் இந்த ஊர், உலகம் அது மீம்ஸ்தான்னு சூடத்துல அடிச்சு சத்தியம் பண்ணும்ங்கிறதை எப்படியோ தெரிஞ்சுக்கிட்டாய்ங்க. அதுக்காக அதே ஆணியைப் பிடுங்கணும்னு அவசியமில்லை.

  சரி, ஆரம்பிக்கிறது எல்லோருமே `அ'னா... `ஆ'வன்னா...' தானே, அதுக்கப்புறம் புள்ளைங்க எப்படியாவது நாலு டெம்ப்ளேட்டை புதுசாத் தோண்டி எடுத்து `டபக்...டபக்...'னு மேலே வந்துருங்கனு பார்த்தால், வழக்கொழிஞ்சுபோன டெம்ப்ளேட்ல மீம்ஸ் பண்ணி வயிறு எரிய வெக்கிறாய்ங்க. கிண்டுறது பூராமே பீஸ் இல்லாத பிரியாணிதான்..!

  `மை ரியாக்‌ஷன்',  `தட் மொமென்ட் ', `அட்மிட் இட்', `க்ளோஸ் எனஃப்' வகையறா மீம்கள் இனி எத்தனை வருஷத்துக்குதான் போடுவீங்க? அதையெல்லாம் பார்க்கும்போது நான் என்னமோ ஜெமினிகணேசன், சுருளிராஜன் காலத்தில் வாழ்ற மாதிரியே ஃபீல் ஆகுது. அவ்வ்வ்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்