ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

நாம் பொதுவாக ஒரு காரியத்தைத் தொடங்கும்போதே `செய்யலாமா... வேண்டாமா?' எனப் பயங்கர குழப்பத்தில் இருப்போம். அப்படிப்பட்ட நேரத்தில், டாஸ் போட்டு பூவா, தலையான்னு பார்த்து முடிவெடுக்கிறது நம்மில் பலருக்கும் இருக்கும் வழக்கம். கோயிலில் பூ போட்டுப் பார்த்து முடிவெடுக்கிறதும்கூட இந்த வகைதான். இந்த டாஸ் போட்டு முடிவெடுக்கிற பழக்கம் இன்னைக்கு நேத்து இல்லை... ரோமானியர்கள் காலத்தில் இருந்தே மக்கள்கிட்ட இருந்திருக்கு. `எல்லாம் சரி! எதுக்கு இப்போ இந்த விளக்கம்?'னு கேட்கிறீங்களா? படிங்க பாஸ்.

உங்களோட பாஸ் ஏதாவது ஒரு வேலை சொல்லி அதை எப்போ ஸ்டார்ட் பண்ணலாம்னு முடிவெடுக்கிறதுக்காக, காயினைச் சுண்டிவிட்டு ட்யூப்லைட்டை உடைக்க வேண்டாம் பாஸ். உட்கார்ந்த இடத்தில் கையடக்க ஆண்ட்ராய்ட் மொபைல்லேயே அதுக்கு ஒரு வழி இருக்கு. 'யெஸ் ஆர் நோ' அப்ளிகேஷனை இன்ஸ்டால் பண்ணுங்க. முடிவெடுக்க நினைக்கும்போது குலதெய்வத்தை வேண்டிக்கிட்டு இந்த அப்ளிகேசனைத் திறந்தீங்கனா... ஸ்டார்ட் பட்டன் இருக்கும். அதை க்ளிக் பண்ணிட்டு உங்க ஆட்காட்டி விரலைத் திரையில் தொட்டா இந்த அப்ளிகேஷன் உங்க கைவிரலை ஸ்கேன் பண்ணும் (அட! எல்லாம் சும்மா பில்டப்தாங்க!). அப்புறம் அலசி ஆராய்ஞ்சு ரேண்டம் முறையில் ஆமா, இல்லைனு உங்க அதிர்ஷ்டப்படி இரண்டில் ஒன்றைக் காட்டும்.

ஆமான்னு சொன்னா மனசைத் தேத்திக்கிட்டு வேலையைத் தொடங்குங்க. இல்லைனு சொன்னா, மனசைத் தளரவிடாம மறுபடி முயற்சி பண்ணுங்க. சின்னப்புள்ளத்தனமால்ல இருக்குனு யோசிக்காதீங்க  இந்த முறையானது மன அழுத்தத்தைக் குறைத்து, ஒரு காரியத்தில் முடிவெடுக்க உதவும் என உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்புறம் இந்த அப்ளிகேஷன் சும்மா ஜாலிக்குதான். இது சொல்ற முடிவை ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டு ஆபீஸ் வேலையை ஒத்திவைக்கிறது, ரொம்ப நாளா ப்ரொபோஸ் பண்றதை தள்ளிப்போடுறது மாதிரியான சீரியஸான முடிவெல்லாம் எடுக்காதீங்கனு இந்த அப்ளிகேஷனை வடிவமைச்சவங்களே சொல்றாங்க. அதனால சும்மா ஜாலி பண்ணுங்க பாஸ்!

டவுன்லோடு லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.klimbo.yesorno&hl=en

- கூகுள்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்