`கலை'சாட்சி

லைக்கூடம் என்றால் பத்துக்குப் பத்து அடி அளவுள்ள ஓர் அறைக்குள் அரைவெளிச்சத்தில் இருக்கும் என்றொரு பிம்பம் நம் பலருக்கும் உண்டு. ஆனால் உலகின் மிக நீளமான கலைக்கூடம் என வரலாற்றாசிரியர்கள் அழைக்கும் இடம் எவ்வளவு பெரியது தெரியுமா? அமெரிக்காவின் உடா மாகாணத்தில் உள்ள செவ்விந்தியர்கள் வாழ்ந்த பகுதியான ஒன்பது மைல் பள்ளத்தாக்குதான் அது!

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாறை ஓவியங்கள் இங்கு இதுவரை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. உண்மையில் இந்தப் பள்ளத்தாக்கு நாற்பது மைல் நீளம் கொண்டது. இங்கே ஓடிய ஒன்பது மைல் க்ரீக் என்ற ஆற்றின் பெயரால் இது இவ்வாறு அழைக்கப்படுகிறது. கி.பி. 300-ல் தொடங்கி இப்பகுதியில் பூர்வகுடியான செவ்விந்தியர்கள் வாழ்ந்து வந்ததற்கான அடையாளம் உள்ளது. கி.பி. 950 முதல் கி.பி. 1250 வரை இந்தப் பாறை ஓவியங்கள் செதுக்கப்பட்டுள்ளதாக `கார்பன் டேட்டிங்' முறையில்  கணக்கிட்டுள்ளனர். வீடு முதல் வளர்ப்புப் பிராணிகள் வரை அனைத்தும் இங்கு பாறை ஓவியங்களாகக் காணப்படுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick