கேம்வெறி அனிருத்!

ஃபேஸ்புக் லைவ் ஆப்ஷன் வந்ததிலிருந்து ஆளாளுக்குப் பாட்டுப்பாடியும், தத்துவம் பேசியும், வீடியோ போட்டும் பயமுறுத்திக்கொண்டிருக்க, இங்கே ஒருவர் அதிலேயே நேரலையாக `சொல்லுக்கு துட்டு' என்ற கேம்ஷோ நடத்துகிறார். ஒரு மெசேஜ் தட்டி, ஆளைப் பிடித்தேன்.

``மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்சுட்டு அந்தத் துறையில் ஆர்வம் இல்லாமல் மீடியா பக்கம் கவனத்தைத் திருப்பினேன். மீடியாவில் கேமராவுக்கு முன்பு எத்தனை வருடம் இருக்க முடியுமோ அத்தனை வருடம் நின்னுட்டு அதில் வாய்ப்புகள் குறையும்போது கேமராவுக்குப் பின்னாடி டெக்னீஷியனாக வொர்க் பண்ணணும்னு இப்பவே ப்ளான் பண்ணி வெச்சுருக்கேன். ஒரு நல்ல சான்ஸ் கிடைச்சாப் போதும். அதை நூலாப் பிடிச்சு வளர்ந்துருவேன் ப்ரோ...'' என உற்சாகம் மின்னப் பேசுகிறார் அனிருத். (இவரு... வேற அனிருத்!)

``வீடியோ ஜாக்கியாக ஃபேம் தமிழ் (FameTamil) பேஜ்ல நான் புரோகிராம் பண்ணிட்டு இருந்தேன். ஃபேம் தமிழ் கமர்ஷியலாகச் சில சறுக்கல்களைச் சந்திச்சதால அதில் நான் பண்ணின புரோகிராமை நிறுத்திட்டாங்க. அதுக்கு அப்புறம் என்ன பண்றதுனு தெரியாமல் யோசிச்சுட்டு இருந்தேன். அப்போதான் ஃபேஸ்புக் லைவ் ஆப்ஷன் புதுசா வந்திருக்கிறதைப் பார்த்துட்டு இதை வெச்சே நாம ஏன் கேம்-ஷோ பண்ணக் கூடாதுனு யோசிச்சேன். சோதனை முயற்சியா ஒரே ஒரு ஷோ பண்ணிப் பார்க்கலாம்னு என்னோட பேஜ்ல போஸ்ட் போட்டுட்டு ஒருநாள் நைட் ஒன்பது மணிக்கு ஆரம்பிச்சோம். முதல் ரெண்டு வாரத்துக்கு நானே கைப்பட படங்களை வரைஞ்சுதான் இந்த நிகழ்ச்சியை நடத்தினேன். பிறகு, வீடியோமேக்கிங் செய்யும் நண்பர்கள் என் நிகழ்ச்சிக்கான படங்களை ஸ்லைடுகளாகவே பண்ணிக் கொடுத்தாங்க. அதற்குப் பிறகு புரோகிராம் இன்னும் கலர்ஃபுல்லா மாறியிருக்கு.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick