``மதுரைப் பங்காளிங்க நாங்க!''

மிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் பிரெட்லீயோடு பிஸியாக இருந்த மா.கா.பா ஆனந்தை பிடித்தோம். பத்து வருடங்களுக்கு முன்பு அவருடைய நண்பர்களோடு சேர்ந்து எடுத்த போட்டோவைக்காட்ட  மனிதன் ஃபீலீங்ஸ் ஆஃப் முஸ்தஃபா ஆகிவிட்டார்.

``எங்க இருந்துயா இந்த போட்டோவைக் கண்டுபிடிச்சீங்க? இப்போப் பார்த்தா எனக்கே சிரிப்பா இருக்கு. 2006ல மிர்ச்சியில ஆர்ஜேவா  சேர்ந்த டைல்ம அகமதாபாத்ல டிரெயினிங் போட்ருந்தாங்க. அப்போ மதுரை டீம்ல கமல், சேது, ஆண்ட்ரூஸ், கோயம்புத்தூர் டீம்ல நான், ஆர்ஜே பாலாஜி, மிர்ச்சி செந்தில், டோங்லீ கார்த்தி எல்லோரும் தினம் சாயங்காலம் கிரிக்கெட் விளையாடுவோம். அப்போ மிர்ச்சி செந்தில் சொன்ன பாட்ஷா டான் கான்செப்ட்லதான் இந்த போட்டோ எடுத்தோம். சேது தான் பாஷா பாய். ஆர்ஜே பாலாஜி ரைட்ஹேண்ட். அப்புராணியா இருக்கு நான்தான் பாஷாபாயோட செல்லப்பிராணி.''

`பாஸ் இதோட முடியல. இந்த போட்டோவுல இருக்குற எல்லார்கிட்டயும் உங்க கிட்ட கேட்க வேண்டிய கேள்வியையும் வாங்கிட்டு வந்துருக்கோம்.' என்றதும் ரிலே பேட்டிக்குத் தயாரானார் மா.கா.பா.ஆனந்த்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick