யூ-டியூப் தான் இனி கெத்து!

 பீப் சாங்கிற்கு எதிரான பாடல், சென்னை வெள்ளத்தின்போது ‘மேன் வெர்சஸ் சென்னை’ என ஆடிக்கு ஒருக்கா, அமாவாசைக்கு ஒருக்கா மக்களைத் திரும்பிப் பார்க்கவைத்த ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ யூ-டியூப் குழுவினர், சமீபமாக செம வீடியோக்கள் செய்து மக்களைத் திரும்பத் திரும்பப் பார்க்கவைக்கிறார்கள் (அட! ). அவர்களுடன் ஒரு ஜாலி மீட்டிங்...

‘`இன்னும் சில வருடம் கழிச்சு யூ-டியூப்தான் மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமா இருக்கும். யூ-டியூப்தான் இனி கெத்து, யூ-டியூப்ல வீடியோ பண்ணாதான் அவன் பெரிய செலிபிரட்டினு சொல்லப்போற காலம் வரும் ப்ரோ. அதனாலதான் முன்னாடியே பிளான் பண்ணி இதில் இறங்கிட்டோம்’’ நெஞ்சை நிமிர்த்திப் பெருமிதத்தோடு ஆரம்பிக்கிறார் ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ முத்து.

‘`மெட்ராஸ்னாலே சென்ட்ரல் மட்டும்தானா? மெரினா பீச், வள்ளுவர் கோட்டமெல்லாம் என்னங்க பாவம் பண்ணுச்சு?’’

‘`அப்படியெல்லாம் இல்லை ப்ரோ. எங்க சேனல் லோகோவில் வள்ளுவர் கோட்டம், மெரினா பீச் எல்லாம் இருக்கும். ஏன் இப்படி முதல் கேள்வியே குண்டக்க மண்டக்க கேட்கிறீங்க? சரி நெக்ஸ்ட்...’’

‘` ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ சேனல் உருவானது எப்படி?’’

‘`நான், மாயா அப்புறம் இன்னும் சில நண்பர்கள் பேசிட்டு இருக்கும்போது ஸ்பார்க் ஆன ஐடியா. இந்த ஐடியாவை வெச்சுக்கிட்டு, கவிபுவிமீடியா பிரைவேட் லிமிடெட் ஓனர்ஸை சந்திச்சோம். அவங்களுக்கும் பிடிச்சுப்போக, இதைக் குட்டி கம்பெனியாவே மாத்திட்டோம். இப்படித்தான் மெட்ராஸ் சென்ட்ரல் உருவாச்சு. இவ்வளவு யூ-டியூப் சேனல்கள் மத்தியில் எங்க பேரும் மக்களுக்கு ஓரளவு தெரியுதுன்னா, அதுக்குக் காரணம் நாங்க பண்ற வீடியோக்கள். வெளியே இருந்து பார்க்கிறவங்களுக்கு ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ங்கிறது பெரிய டீம் மாதிரி தெரியும். ஆனால், இரண்டு கேமராமேன், இரண்டு எடிட்டர், நான்கு வீடியோ புரொடியூசர்கள்னு ரொம்பவே சின்ன டீம் நாங்க!’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick