குரு-சிஷ்யன்!

பாலசுப்ரமணியெம்... ஒளிஜாலக் காரர் பி.சி.ஸ்ரீராமின் சீடர்! `பிதாமகன்', `ரஜினிமுருகன், `இது நம்ம ஆளு' படங்களின் கலர்ஃபுல் ஃப்ரேம்களுக்கு சொந்தக்காரர்.உதயநிதி ஸ்டாலினின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர். `சரவணன் இருக்க பயமேன்' படத்தின் படப்பிடிப்புக்காக தேனிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார்.

கோபி ஜெகதீஷ்... பாலசுப்ர மணியெம்மின் சீடர். `இனிமே இப்படித்தான்' படத்தை முடித்த கையோடு அருண்விஜய்யின் `வா டீல்' ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருந்தார். ஃபேஸ்புக்கில் மட்டும்தான் See your memories இருக்க வேண்டுமா? நம்ம டைம்பாஸில் `see your memories' க்காக இந்த குரு-சிஷ்யர்களுக்கு இடையே ஒரு நாஸ்டால்ஜியா சந்திப்பு!

``ஒரு மாணவனாக பி.சி.ஸ்ரீராம் சாருடனான  உங்கள் முதல் சந்திப்பு.ஒரு ஆசிரியராக கோபியுடனான உங்கள் முதல் சந்திப்பு எப்படி இருந்தது?''


``காரைக்குடிதான் சொந்த ஊரு. கல்யாண போட்டோகிராபராக இருந்தேன். சினிமா ஆசை இருந்தாலும் சினிமான்னா என்னன்னே தெரியாது. பி.சி சார்கிட்ட சேரணும்னு மட்டும் மனசு சொல்லிக்கிட்டே இருந்துச்சு. ஒருவேளை திரைப்படக்கல்லூரியில் படிச்சாத்தான் சான்ஸ் கிடைக்குமோங்கிற பயத்துலயே அவரைப் பார்க்காம ஒரு ரெண்டு வருஷம் வேறவேற மீடியம்ல வேலை பார்த்துட்டு இருந்தேன். என்னோட ஃப்ரெண்டு ரிப்போர்ட்டரா இருந்தாங்க. பி.சி சாரைப் பேட்டி எடுக்கப்போறேன்னு சொன்னதும் நான் போட்டோ எடுக்கவர்றேன்னு அடம்புடிச்சு போயிட்டேன். போறப்ப சாருக்கு என்னெல்லாம் புடிக்குமோ அந்த மாதிரி எல்லாம் இருக்கணும்னு பார்த்துக்கிட்டேன். அவருக்கு கறுப்புன்னா பிடிக்கும். நானும் கறுப்புச்சட்டை வாங்கிப் போட்டுக்கிட்டேன். பேட்டி முடிஞ்சது. `என்ன பண்ற?'னு சார் கேட்டார். `உங்கக்கிட்ட சேரணும்'னு சொல்லி கையில இருந்த ஆல்பத்தைக் காமிச்சேன். எல்லாம் பார்த்துட்டு அந்த போட்டோக்களுக்கு டெக்னிக்கல் டீட்டெயில்ஸ் எல்லாம் கேட்டாரு. அவ்ளோ தான். சார் ஒண்ணுமே சொல்லலை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick