குத்துங்க எசமான் குத்துங்க!

காலத்திற்கு ஏற்ப ஜனங்களின் சினிமா ரசனை மாறினாலும் என்றும் எவர்க்ரீனாக ரசிக்கப்படும் விஷயங்களில் ஐட்டம் சாங்கிற்கு நிச்சயம் தனி இடம் உண்டு. ஐட்டம் பாடல்களில் ஜெயமாலினி, அனுராதா, சில்க் ஸ்மிதாக்களைப் பார்த்த ஜெனரேஷனைக் கடந்து இன்று ஹீரோயின்களே குத்தாட்ட நாயகிகளாக மாறினாலும், சில விதிகளை மாறாமல் கடைபிடித்து வருகிறார்கள் நம் இயக்குநர்கள். அவை என்ன என்ன என்று பார்க்கலாமா..?

 பெரும்பாலும் ஐட்டம் பாடல்களை கிளைமாக்ஸுக்கு முன்னாடிதான் வைப்பார்கள். அப்போதானே படம் முடிந்து வெளியே வரும் நம்மவர்கள், ``கிளைமாக்ஸ் மட்டும் சரியில்ல, மத்தபடி படம் ஓகே'' என சர்டிபிக்கேட் கொடுப்பார்கள்! ( என்ன ஒரு புத்திசாலித்தனம்!)

படம் முழுக்க கத்திக்கிட்டும் அடிச்சுக்கிட்டும் இருக்குற நம்ம ஹீரோவும் வில்லனும் ஐட்டம் பாடலைப் போட்டதும் ஒட்டிக்கிட்டும் கட்டிக்கிட்டும் டான்ஸ் ஆட ஆரம்பிச்சுடுவாங்க! (அது வேற வாய்... இது நாற வாய்!)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick