ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

மக்கு மறதி தேசிய வியாதி ஆச்சே!. ஏற்கெனவே சந்தித்த நபரை மீண்டும் சந்திக்கும்போது அவரது பெயர் நமக்கு அரைகுறையாகத்தான் நினைவில் வரும். இது பலருக்கும் இருக்கின்ற சாதாரண பிரச்னை. வலைதளங்களில் பாஸ்வேர்ட் உருவாக்கும்போது ஞாபகமறப் பிரச்னையைத் தவிர்க்க, எல்லாவற்றிற்கும் ஒரே பாஸ்வேர்ட் தர முடிவெடுத்திருப்போம். ஆனால் ஒரு நம்பர், ஸ்பெஷல் கேரக்டராவது இருக்க வேண்டும் என்று பல வலைதளங்கள் நம்மை நிர்பந்திப்பதால் அந்நேரத்திற்கு மட்டும் ஏதாவது ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்னாட்களில் அதை மறந்திருப்போம். ஃபர்கெட் பாஸ்வேர்ட் என்ற ஆப்சன் மட்டும் இல்லையென்றால் ஒவ்வொரு முறையும் புதிதாக அக்கவுன்ட் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருந்திருப்போம். இந்தப் பிரச்னைக்குத் தீர்வாகத்தான் பாஸ்வேர்ட் மேனேஜர் என்ற அப்ளிகேசன் பயன்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick