``அகோரிகளை தமிழ்நாட்டுக்கு கூட்டிட்டு வரப்போறேன்!''

`பில்லி, சூனியம் எல்லாம் பொய். எனக்கு பில்லி, சூனியம், ஏவல் மூலமாக பாதிப்பு ஏற்படுத்தினால் அவர்களுக்கு 50 லட்சம் பரிசு வழங்கப்படும்’ இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதேநாளில் ஃபேஸ்புக் முதல் மீடியா வரை ரணகளப்பட்டுக்கொண்டிருந்த விஷயம் இது. `தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத்’தின் அப்போதைய மாநிலத் தலைவர் பி.ஜெய்னுலாபிதீன் பில்லி, சூனியம் எல்லாமே பொய் என்பதை நிரூபிக்க இவ்வாறு ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்தச் சவாலை திருச்சி - சங்கிலியாண்டபுரம் சுடுகாட்டுப் பகுதியில் பூஜை செய்துவந்த `அகோரி' மணிகண்டன் ஏற்றுக்கொண்டதால் பரபரப்பு உண்டானது. 

01-08-2014-ல் தொடங்கி 17-09-2014 வரை 48 நாட்கள் அவருக்கு அவகாசமும் தரப்பட்டது. ஆனால் மணிகண்டன் சொன்ன எதுவும் நடக்கவில்லை. ஜெய்னுலாபிதீன் என்னை நேரில் சந்திக்காமல் ஒப்பந்தத்தை மீறியதால் சூனியம் பலிக்கவில்லை எனக் குற்றச்சாட்டும் வைத்தார்.
இரண்டு வருடங் களுக்குப் பிறகு, `இந்த அகோரி மணிகண்டன் என்ன ஆனார்?' எனத் தேடினேன். இங்கே மயானத்தில் சுற்றித் திரிந்தவர், இப்போது காசியில் பக்தர்கள் கூட்டத்துக்கு நடுவே மண்டை ஓட்டு மாலையுடன் ரதத்தில் வலம் வருகிறார். ஃபேஸ்புக்கிலும் தன்னைப்பற்றி அவ்வப்போது அப்டேட்களைத் தெறிக்க விடுகிறார்.

``சவால்ல என்னதான் ஆச்சு?''


``சூனியம் இருக்கான்னு நிரூபிச்சா போதும்னு சொன்னாங்க. ஆனா, ஜெய்னுலாபிதீனைச் சந்திச்சப்போ `என்னைக் கொன்னாதான் சூனியம் இருக்குனு நம்புவேன்'னு சொல்லிட்டார். ஒரு மனுசனுக்குப் பிரச்னை இருந்துச்சுனா, அவங்களுக்கு ராத்திரி தூக்கம் வராது. கெட்ட கனவு வரும். சம்பந்தமில்லாம உடம்பு வலிக்கும். அப்படி பிரச்னையோட இருக்கிற ஒருத்தரைக் கூட்டிட்டு வாங்கனுதான் நான் சொன்னேன். அதை அவங்க பண்ணலை. நீங்களே இந்த மூணு பிரச்னையும் இருக்கிற யாரை வேணும்னாலும் கூட்டிக்கிட்டு வாங்களேன், இப்பவே சூனியம் உண்மைனு நிரூபிக்கிறேன்.'' (நான் ஏங்க நடுராத்திரி சுடுகாட்டுக்குப் போகணும்?)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick