சினிமால்

 `சிங்கம் 2' படத்தின் அறிமுகப் பாடலில் சூர்யாவுடன் குத்தாட்டம் போட்டார் நடிகை அஞ்சலி. `சிங்கம் 3' படத்திலும் அதேமாதிரி ஒரு குத்துப்பாட்டுக்கு நடனமாட ஒரு சில நடிகைகளிடம் பேசி வந்தார்கள். இறுதியாக `கன்னித்தீவு பொண்ணா' பாட்டுக்கு ஆடிய நீது சந்திராவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் செம்ம குத்தாட்டம் போட்டிருக்கிறாராம் சூர்யா. பாட்டும் செம ஸ்பீடா சார்!

ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கிக்கொண்டிருக்கும் `2.0' படத்தில் ஒரு முக்கியமான வில்லன் ரோலுக்கு மலையாளத்தின் பிரபல வில்லன் நடிகரான கலாபவன் சாஜனை அழைத்து நடிக்க வைத்திருக்கிறார் ஷங்கர். படத்தில் இவருடைய கேரக்டருக்கும் ரொம்ப முக்கியத்துவம் இருக்கிறதாம். `படம் வெளியாகும்போது வேர்ல்டு ஃபேமஸ் ஆகிவிடுவேன்!' எனச் சொல்லி பெருமிதப்படுகிறார் சாஜன். சூப்பர் சேட்டா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick