ரத்தம் நிறம் கறுப்பு!

ப்போ வர்ற படங்கள் கலர்ப்படமாக இல்லாமல் பிளாக் அண்ட் ஒயிட் சினிமாவாகவே வந்துச்சுன்னா, எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பார்த்தேன். கிர்ர்ருங்குது..!

 கேப்டன் விஜயகாந்த், ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் படங்களின் கிளைமாக்ஸ் காட்சியில் கண்டிப்பா சிவப்பு வயரையோ, பச்சை வயரையோ கட் பண்ணி பாம் வெடிக்காம வெச்சுப் பலபேரைக் காப்பாத்துற சீன் கண்டிப்பா இருக்கும். `ப்ளாக் அண்ட் வொயிட்' சினிமாவா வந்திருந்தா, அந்தக் காட்சியில வயரோட கலர் சிவப்பா, பச்சையா, மஞ்சளா, ஊதாவானு ஹீரோவுக்கும் தெரியாம, நமக்கும் புரியாம, நகத்தைக் கடிச்சுக்கிட்டே உட்கார்ந்திருக்கலாம். இல்லை, `ஏதோ ஒரு வயரைக் கடிச்சுத்துப்பட்டும். என்ன நடக்குதுனு பார்ப்போம்'னு படபடபடப்பைக் குறைச்சுக்கிட்டுப் படம் பார்த்திருப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick