ஸாரி ஃப்ரெண்ட்ஸ்!

ருத்தன் லவ் பண்ற பொண்ணுகிட்ட நேரடியா ப்ரொபோஸ் பண்றதுக்கு பயந்துக்கிட்டு ஃப்ரெண்டுகிட்ட ஹெல்ப் கேட்பான். கடைசியா அது ட்விஸ்ட் ஆகி அவனோட ஃப்ரெண்டுக்கே பிக்கப் ஆகிரும். அந்த மாதிரிக் கதைகள் இன்னிக்கி நேத்திக்கி இல்லை. பல காலமா தமிழ் சினிமாவில் புலிவாலைப் பிடிச்ச கதையா பின்தொடர்ந்துகிட்டேதான் இருக்கு. லைட்டா ரீலை சுத்தவிட்டோம்னா...

 தல நடிச்ச `ராஜா' படத்தோட கதையே, அஜீத்கிட்ட காதலைச் சொல்ல பயப்படுற ஜோதிகா, தயிர்சாதமான ப்ரியங்கா த்ரிவேதியை துப்பறிவாளரா நியமிச்சு அவரைப்பற்றி விசாரிச்சு அறிக்கை தாக்கல் பண்ணச் சொல்வாங்க. கொஞ்சம் டீப்பா இறங்கி விசாரிச்சது வில்லங்கமாகி அப்புறம் அவங்களுக்குள்ளேயே காதல் பத்திக்கும். #போச்சா

  `மயக்கம் என்ன' படத்தில் தனுஷுடைய ஃப்ரெண்டா நடிச்ச சுந்தர், ரிச்சாவைக் காதலிப்பார். `கூடவே சுத்திக்கிட்டுத் திரிஞ்ச செவ்வாளை' தனுஷ், ரிச்சாவை உஷார் பண்ணி அடுத்த லெவலுக்குப்போக, வேறு வழியில்லாம அவரோட ஃப்ரெண்டே கூடஇருந்து கல்யாணமும் செய்துவைக்கும் கொடுமையும் நடக்கும். #என் கஷ்டம் யாருக்கும் வரக் கூடாது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick