இது சினிமா RTI மக்களே... | Cinema RTI - Timepass | டைம்பாஸ்

இது சினிமா RTI மக்களே...

கவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்விகள் கேட்டால், அதிகாரிகள்தான் அலறுவார்கள். ஆனால் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு புண்ணியவான் தன் கேள்விகளின் மூலம் மொத்தக் கூட்டத்தையும் அலறவைத்திருக்கிறார். `இந்தியாவை ஏலியன்களோ ஸோம்பிக்களோ தாக்கினால் அதைச் சமாளிக்க அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது? வில்ஸ்மித் இல்லாமல் இந்தத் தாக்குதலை நம்மால் சமாளிக்க முடியுமா?' என படு சீரியஸாகவே ஆர்.டி.ஐ மனுவில் கேட்டிருக்கிறார் அந்தப் புண்ணியாத்மா. சும்மா இருக்க நாங்கள் மட்டும் என்ன தக்காளித் தொக்கா? எங்கள் பங்கிற்கு ஆர்.டி.ஐ-யில் என்னென்ன கேட்கலாம் என யோசித்து வைத்திருக்கிறோம். முடிஞ்சா உங்க செலவுல மனுப்போட்டுக் கேளுங்க மக்களே!

அமெரிக்கப் பாதுகாப்பையே ஜஸ்ட் லைக் தட் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்த சிந்தடிக் பயோ வைரஸ் மீண்டும் தாக்கினால் அதைச் சமாளிக்க என்ன திட்டம் இருக்கிறது? கோதை ராதாவோடு குஷியாய் செட்டில் ஆகியிருக்கும் விஞ்ஞானி கோவிந்தின் உதவி மீண்டும் கோரப்படுமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick