டெஸ்ட்னா சோதனை தானே?

500-வது டெஸ்ட்டில் வெற்றிக்கனியைப் பறித்து 501-வது டெஸ்ட்டும் விளையாடி முடித்துவிட்டது இந்திய அணி. நம்பர்கள் மாறினாலும் அன்றிலிருந்து இன்று வரை சில கலகல சீன்கள் மட்டும் களத்தில் மாறவே இல்லை. அவற்றைப் பற்றிய ஃப்ளாஷ்பேக் பதிவு இது.

டெஸ்ட் என்றாலே நினைவுக்கு வரும் `பிரத்தியேகமான' பல பிளேயர்கள் இருப்பார்கள். அதில் முக்கியமானவர்கள், ஆகாஷ் சோப்ராவும் வாசிம் ஜாபரும். பேட்டிங்கை மெகாசீரியல் ரேஞ்சுக்கு ஜவ்வா....ய் இழுப்பவர்கள். எந்தளவுக்கு எனில்... நீங்கள் காலை டிபன் முடித்துக் குட்டித்தூக்கம் போட்டுவிட்டு, மதியம் லஞ்ச்சுக்கு எழுந்தால்கூட இந்தியாவின் ஸ்கோர் அப்படியே ஃப்ரீஸ் ஆகியிருக்கும். டி.வி-யில் கோளாறோ எனத் தட்டிப் பார்க்க வைக்கும் அளவிற்கு அநியாய பொறுமைசாலி பேட்ஸ்மேன்கள் இவர்கள்! #மறக்கமுடியுமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick